Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஈசாக்கு வாழ்க்கையின்’ கடைசி நேரத்தில் தேவனுடைய சித்தத்தை அறிந்த மனிதன்


அன்பு செலுத்துவதில் பாரபட்சம் கூடாது
.
ஆபிரகாம், ஈசாக்கு. யாக்கோபு. யோசேப்பு என்று நான்கு முற்பிதாக்கள் பற்றி வேதத்தில் சொல்லப்பட்டாலும் ஈசாக்கு 180ஆண்டுகள் வாழ்ந்தாலும் , அவரைப்பற்றி வேதத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் மிக மிக குறைவு . (இரண்டே அதிகாரங்கள் )

அவர் தேவனுடைய வெளிப்படுதலை, தேவனுடைய சித்தத்தை கடைசி நேரத்தில்தான் புரிந்த முற்பிதா.

ஒரு நல்ல நேர்மையான பாரபட்சமற்ற குடும்பத் தலைவனாக அவர் காணப்படவில்லை.
பாரபட்சமாக ஏசாவை நேசித்தார் .
அற்பமான உணவிற்காக அவன்மீது அன்பு செலுத்தினார்."ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்: ஆதி 25:28
மரித்துப் போகும் நேரத்திலாவது தன் குடும்பத்தைக் குறித்து ,
“அதாவது மூத்தவன் இளையவனை சேவிப்பான்” என்கிற தேவனுடைய வெளிப்படுதலை தன் மனைவிரெபெக்கா மூலம் பெற்றிருப்பானேயானால் அவன் ஏசாவை அழைத்து “நன்கு உணவை சமைத்துக் கொண்டு வா உன்னை ஆசீர்வதிக்கிறேன்” என்று சொல்லியிருக்க மாட்டார் .

தேவ சித்தத்தை தன் மனைவி ரெபெக்காளிடமிருந்து அறிந்து செயல்பட்டிருந்தால் தன் மனைவி ரெபெக்காள் தனக்கு விரோதமாக தன்னுடைய இன்னொரு மகனை பொய் சொல்ல சொல்லி ஏமாற்றி ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ள சொல்லியிருக்க வேண்டி சூழ் நிலை ஏற்பட்டிருக்காது.
ஆனால் தேவனுடைய அனாதி திட்டம் ஈசாக்கு யாக்கோபுவை
ஆசிர்வதித்ததை திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை.(அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் " ஆதி 27:33)
அந்த ஒரு காரியத்தில் மாத்திரம்தான் அவன் தேவனுடைய சித்தத்தை அறிந்து அதை அதை விட்டு பின்வாங்கவில்லை.

அதனால் தான் அவன் பெயர் விசுவாச வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றது.எபி 11:20

ஈசாக்கின் பலவீனங்கள்.
1ஒரு குடும்பத் தலைவனாக பாரபட்சமில்லாமல் தன் குழந்தைகளை நேசிக்க தவறிவிட்டார்
2. தன் குடும்பத்தைப் பற்றிய தேவ சித்தத்தை அறிந்து செயல்படாமல் இறுதிக் கட்டம் வரை வாழ்ந்தவர்"?("மூத்தவன் இளையவனைச் சேவிப்பான்")ஆதி 25:28

3 ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் பற்றிய புரிதல் இல்லமல் அவனை கண்டிக்காமல் அவனுக்கு ஆதரவாக இறுதிவரை இருந்தவன் எபி 12:16