Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கணக்கெடுப்பை நடத்த தாவீது யாரால் தூண்டப்பட்டான்?
உங்கள் சிந்தனைக்கு:

ணக்கெடுப்பை நடத்த தாவீது யாரால் தூண்டப்பட்டான்?


2 சாமுவேல் புத்தகம் வேத பாடம் 14

கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் வந்தது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை எண்ணிக்கை பார் என்று அவர்களுக்கு எதிராகச் சொல்லுகிறதற்கு தாவீது தூண்டப்பட்டான்.

.1 நாளாகமம் 21:1

"யெகோவாவின் கோபம் மறுபடியும் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது, அவர் அவர்களுக்கு விரோதமாய் தாவீதை ஏவி, “நீ போய் இஸ்ரயேலரையும், யூதாவையும் கணக்கிடு” என்றார்."
2 சாமுயேல் 24:1

இலகு இலங்கை மொழிபெயர்ப்பு.
2 சாமுவேல் புத்தகத்தில் கடவுள் கணக்கெடுப்பை எடுக்கும்படி தாவீதை தூண்டினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் நாளாகமம் புத்தகத்தில் சாத்தான் தூண்டியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
எதில் எந்தக் கருத்து உண்மையானது?
இவைகள் இரண்டுமே உண்மை என்று வியர்ஸ்பி மற்றும் வில்லியம் மெக்டொனால்ட் கூறுகிறார்கள்.
‘'God permitted Satan to tempt David in order to accomplish the purpose He had in mind"

பொதுவாக இம்மாதிரி கணக்கெடுப்பு நடத்தும்பொழுது மக்களிடமிருந்து
அரைச்சேக்கல் ஆலயத்திற்கு கொடுக்க வேண்டும்.
இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும்..இதுTemple tax அழைக்கப்படும்.
யாத்திராகமம் 30:13.
ஆனால் இந்தக் கணக்கெடுப்பில் அப்படி வரி வசூலித்ததாகத் தெரியவில்லை
. இது முழுக்க முழுக்க தாவீது தன்னுடைய ராணுவ பலத்தை உலகுக்கு அறிவிக்க வேண்டும், அதைத் தெரிவிக்க வேண்டும்
என்கிற பெருமையினால் செய்யப்பட்ட காரியம்.
கடவுள்மீது நம்பிக்கை வைக்காமல் தன் ராணுவத்தின் மீது பெருமை கொள்வதற்காக இந்தக் காரியத்தைத் தாவீது செய்தான்.
20 வயதுக்கு மேற்பட்டவர்களை அறிந்து கொள்ள கணக்கெடுக்கப்பட்டது. அதாவது ராணுவத்திற்கு தயாராக உள்ள எண்ணிக்கைபற்றி அறிவதற்காக எடுக்கப்பட்டது.

தாவீது பத்சேபாள் விவகாரத்தில் தாவிது மாமிச பலவீனத்தினால் வீழ்ந்து போனான்.

இங்கே அவன் தன்னுடைய ஆவிக்குரிய பெருமையையினால் தன் தன்னுடைய ஜனத்திற்கு பெரும் தீமையை வரவழைத்தான்.

அதன் விளைவு


ஏழு வருடங்கள் பஞ்சம் அல்லது மூன்று மாதங்கள் எதிரிகள் பின்தொடர தாவீதுஅவர்களுக்கு முன்பாக ஓடிப்போக வேண்டும், அல்லது தேசத்தில் மூன்று நாட்கள் கொள்ளைநோய் உண்டாக வேண்டும் என்கிற மூன்று தண்டனைகளில் ஏதாவது ஒரு தண்டனையைத் தெரிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டான்.

அதற்குத் தாவீது “ நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மிகப்பெரியது; மனிதர்கள் கையிலே விழாமல் இருப்பேனாக என்றான்”.
கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.
2 சாமுவேல் 24:15.
இது தாவீதி செய்த இரண்டாவது பாவம் தாவீது பத்சேபாளோடு
ஏற்பட்ட தவறான உறவைவிடத் தான் கணக்கெடுப்பு நடத்தியதை" மிகவும் பாவஞ்செய்தேன்"என்றான்
சங்கீத41:4,
("I have sinned greatly')
1 நாளாகமம் 21:8.,சங்கீத41:4,


இதற்குப் பரிகாரமாகத் தாவீது தரிசனக்காரனான காத்தின் கட்டளைப்படி
"அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினானன்"
2 சாமுயேல் 24:18.


அன்றையதினம் காத் தாவீதிடம் சென்று, “நீ எபூசியனான அர்வனாவின் சூடடிக்கும் களத்திற்குப் போய் அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டு” என்றான்.
அங்கே தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் பலியிட்டான். அப்பொழுது நாட்டிற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலுக்கு யெகோவா பதிலளித்தார், இஸ்ரயேலின்மேல் வந்த கொள்ளைநோய் நின்றுபோனது.
2 சாமுயேல் 24:18, 25
இந்த இடம் என்பது ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை பலியிட முன்வந்த இடம்.(ஆதி22).
இந்த இடத்தில் தான் சாலமோன் பின் நாட்களில் பிரம்மாண்டமான ஒரு தேவாலயத்தைக் கட்டினான்
இதன் மூலம்தேவன் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

தாவீதுக்கு தேவனுடைய திட்டத்தில் மிகப்பெரிய பங்கு உள்ளது.
அவனது வம்சத்தில் உலகத்தின் இரட்சகர் பிறந்தார். அவனுடைய 73 சங்கீதங்கள் சங்கீத புத்தகத்தில் காணப்படுகிறது. இவ்வளவு பெரிய தேவனுடைய மனிதனின் தவறுகளையும் பலவீனங்களையும் வேத புத்தகமும் தெளிவாக எழுதி இருக்கிறது.

தாவீது செய்த இரண்டு மிகப்பெரிய பாவங்களிலும் இரண்டு மிகப்பெரிய நன்மைகளை இந்த உலகத்திற்கு தேவன் அளித்தார் என்பதுதான் நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரியம்.


1தாவீதுக்கு அநேக மனைவிகள் இருந்தாலும் உரியாவின் மனைவியாக இருந்து பின் நாட்களில் தாவீதின் மனைவியான பத்சேபாள் மூலமாகப் பிறந்த சாலமோன் தான் தாவீதுக்கு பிறகு அரசன் ஆனான்.தேவனுடைய ஆலயத்தைக் கட்டினான்.
2. தன்னுடைய பெருமையினால் ராணுவத்தில் சேர தகுதியானவர்களின் கணக்கெடுப்பை நடத்தியதற்கு பரிகாரமாக ஒரு இடத்தில் பலிபீடம் கட்டினான். பிறகு அங்குத் தான் தேவனுடைய ஆலயம் கட்டப்பட்டது.
இந்த இரண்டு காரியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது நம்முடைய தோல்விகளை உலகம் பரிகாசம் செய்யும்பொழுது நகைப்பிற்குரியவர்களாக மாற்றும்பொழுது தேவன் அந்தப் பலவீனங்கள் மூலமாகச் சில வேலைகளில் தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். தேவனுடைய சித்தத்தின் மத்தியில் இருப்பவர்களுக்குச் சகலமும் (ஏன் நம்முடைய பாவத்தின் மூலம் ஏற்படும் விளைவுகளும்) நன்மைக்கு ஏதுவாகவே வாழ்க்கையில் மாறும்