Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தீமோத்தேயு 2:11,12 ன் உண்மையான பொருள் என்ன?
உங்கள் சிந்தனைக்கு:

தீமோத்தேயு 2:11,12 ன் உண்மையான பொருள் என்ன?
நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.
நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

2 தீமோத்தேயு 2:11,12.

இந்த வார்த்தையை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1.நாம் அவரை மறுதலித்தால், கடவுளும் நம்மை மறுதலிப்பார்.

2.நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், கடவுள் உண்மையுள்ளவராயிருக்கிறார்;

3.கடவுள் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

இதன்  முதல் கூற்றைப் பற்றித் தியானிக்கலாம்.
"நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்"
இதன்  விளக்கம் மத்தே 10:33 ல் இயேசு கிறிஸ்து  சொல்லிய வார்த்தையில் உள்ளது "மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்".
.

அடுத்து இரண்டாவது  முதல் கூற்றைத் தியானிக்கலாம்.
'நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்'
இதன் விளக்கம் "நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்."
நம்முடைய செயல்கள் உண்மை குறைவாக இருந்தாலும் நாம் மீட்பை ஒருபோதும் இழக்க மாட்டோம்.  நியாதீர்ப்பின்  நாளில் நமக்குள்ள பரிசுகளை   வேண்டுமானால் இழக்கலாம்.
அவர் நம்மை
தள்ளிவிடமாட்டார். கைவிடமாட்டார். அதன் விளைவாக நாம் நமது இரட்சிப்பை இழந்து போகமாட்டோம்

கடைசியாக
"அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்'

அதாவது ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.
அவருடைய அடிப்படை குணங்களான Divine attributes) இரக்கம்  நீதி தயவு   நியாயத்தீர்ப்பு  போன்ற   இவைகளுக்கு மாறாக  எதையும்  செய்யமாட்டார்,  செய்ய இயலாது
.அவரால் செய்ய முடியாத செயல் ஓன்று இருக்குமானால் அது தம்முடய அடிப்படை சுபாவங்களுக்கு  மாறாக எதையும் செய்ய இயலாத செயல்தான்.

The one and only thing He cannot do, because He will not do is to deny Himself or contrary to Himself.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்
அதாவது நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்.

"நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர்." இது அவரின் நம்பகத்தன்மையையை  சார்ந்த குணம்.


கடைசியாகச் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்
எனவே அவர் ஒருபோதும் தம்முடைய தெய்வீக பண்புக்கூறுகளுக்கு  மாறாக எதையும் செய்யமாட்டார்.
The one and only thing He cannot do, because He will not do, is to deny Himself or contrary to Himself.
Ezekiel Shanmugavel