இறையியல் கல்வி கடினமான பாடம் அல்ல
உங்க சிந்தனைக்கு:
இறையியல் கல்வி கடினமான பாடம் அல்ல
இயேசு கிறிஸ்துவை பற்றிய இறையியலை நன்கு புரிந்து கொண்டவன் அதை எளிய முறையில் ஒரு விசுவாசிக்கு விளக்கும்போது அந்த விசுவாசிக்கு இறையியல் கல்வி என்பது மற்ற எல்லா பாடங்களையும் விட மிகவும் பிடித்த பாடமாக மாறிவிடும்.
பிரச்சனை எங்கே இருக்கிறது என்றால் இன்றைக்கு உள்ள இறையியல் போதகர்கள் இறையியல் கல்வியை ஒரு கடினமான ஒரு பாடம் என்கிற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி அதை விசுவாசிகளுக்கு முன்பாக அதைக் காண்பிப்பதால் இறையியல் பாடம் என்பது விசுவாசிகளுக்கு எட்டாத கனியாக இருக்கிறது
இறையியல் பாடத்தை எளிமையான முறையில் விளக்கும்போது அதை விசுவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்பார்கள்.
இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பிரச்சனை பாடத்தில் அல்ல அந்தக் கல்வியை மற்றவர்களுக்குப் போதிக்கின்ற விதத்தில் இருக்கிறது.இது என்னுடைய பார்வை