Joshua's formula for success
உங்கள் சிந்தனைக்கு:
Joshua's formula for success
யோசுவா எகிப்தில் பிறந்தவன்.
அவனுடைய உண்மையான பெயர் ஓசேயா எண்13:8.
இரட்சிப்பு என்பது இதன் அர்த்தம்.
மோசே இவனுடைய பெயரை யோசுவா
என்று மாற்றிவிட்டான்.
இதன் அர்த்தம் ''Jehovah saves" which is the Hebrew form of "Jesus "மத் 1:21.
எனவே
யோசுவா இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமாக இருக்கிறான்.
யோசுவா கானானுக்கு இஸ்ரேல் மக்களை நடத்த வேண்டிய பொறுப்பைஏற்றுக் கொண்டபோது அவனுக்கு வயது 70 இருக்கும்.
இஸ்ரவேல் ஜனங்கள் செங்கடலை கடந்து சென்றபோது கூட இருந்தவன்.
மோசேயின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான நிகழ்வுகளில் கூட இருந்தவன்.
பத்து கட்டளைகளை மோசே கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ள சீனாய் மலைக்குச் சென்றபோது குறிப்பிட்ட இடம்வரைக்கும் அவனோடுகூட யோசுவா சென்றான்
இஸ்ரவேல் ஜனங்கள் அமேலேக்கியரோடு நடந்த போரில் இவர் தளபதியாக இருந்து வெற்றியைப் பெற்றவன்.
கானானுக்கு நேராக மக்களை வழிநடத்தி செல்வதற்கு முன்பாகக் கடவுள் அவனை உற்சாகப்படுத்தி வாக்குறுதிகளைக் கொடுத்தார்.
அப்பொழுது தேவன் சொன்ன முக்கியமான ஒரு காரியத்தை யோசுவா 1:8 ல் பார்க்கலாம்.
இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.
யோசுவா 1:8
இதுதான் அவனுடைய வெற்றிக்கு அடித்தளம்.
யோசுவாவின் வெற்றி அவனுக்கு மோசேயோடு உடன் இருந்த அனுபவத்தின் அடிப்படையிலோ, ஒரு திறமையான படைத்தளபதி என்பதினாலோ, தேவன் அவனை உற்சாகப்படுத்தின காரியத்தினாலோ, வாக்குத்தத்தங்களை பெற்ற காரணத்தினாலோ அல்ல.
அவனுடைய வெற்றி எங்கே இருந்தது என்றால் அவன் கர்த்தருடைய கற்பனைகளை இரவும் பகலும் தியானித்து அதைக் கடைபிடித்த காரியத்தில்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
கிறிஸ்தவ வாழ்க்கையின் வெற்றி என்பது நாம் இரட்சிப்பை பெற்றதினால் மட்டும் அல்ல அது ஒரு ஆரம்பம்.
நாம் எந்த அளவுக்கு வேதத்தை இரவும் பகலும் தியானித்து அதன்படி நடக்க நம்மை ஒப்பு கொடுக்கும் போதுதான் நாம் செய்கிற எந்த வேலையும் உலக வேலைகளானாலும் ஆவிக்குரிய
ஊழியங்களானாலும் வெற்றி பெறும்.
நாம் எந்த அளவுக்கு வார்த்தையாக வெளிப்பட்ட ஆண்டவரை தியானிக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் நாம் கிறிஸ்துவுக்குள் பரிபூரணமாக இருக்க முடியும்.கொலோ2:9,10
நாம் வேதத்தோடு இடைபடாவிட்டால் வேதம் நம்மோடு பேசாது
கடவுள் நம்மோடு பேசாவிட்டால் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு பாதிக்கப்படும்.
தனிப்பட்ட வேத தியானத்தை புறக்கணித்த
காரணத்தினால்தான் உலகம் எதிர்பார்க்கிற ஆவிக்குரிய சத்துவம் நம்மிடத்தில் காணப்படவில்லை. வெறுமனே நடனம் ஆடல் பாடல் சத்தமான பிரசங்கம் உணர்ச்சியினால் தூண்டப்பட்ட ஆராதனை இவைகளினால் இருள் சூழ்ந்த இந்த உலகத்தை நாம் அசைக்க முடியாது.
வேத வசனத்தால் நிறைந்து சாட்சியோடு வாழ்கின்ற வாழ்க்கையை பற்றிக் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிகமாகப் போதிக்கப்படாத காரணத்தினால் இன்றைக்கு சபைகள் உலகத்தார் முன்பு கேலிக்கூத்தாகக் காணப்படுகிறது.
வேத வசனங்களின் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர் என்பதை மறந்து விட்டு அந்த ஆவியானவரை புறம்பே தள்ளி விட்டு வெறுமனே கூச்சல் போடுவதால் நம் தேசத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
தேவன் யோசுவாவுக்கு கொடுத்த Formula வைத்தான் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து நமக்கு வைத்திருக்கிறார்.
காதுள்ளவன் கேட்ககடவன்.