2 தீமோ 3:5 ன் சரியான விளக்கம்.
உங்கள் சிந்தனைக்கு:
2 தீமோ 3:5 ன் சரியான விளக்கம்.
இந்த அதிகாரத்தில் இறுதி நாட்களில் கொடிய காலத்தில் உலகம் எப்படிப்பட்ட மக்களால் நிறைந்திருக்கும் என்பதை பற்றிய பதினெட்டு குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
2:26ல் அந்தக் குறிப்பு தொடங்குகிறது.
இதில் 5வது வசனம் நாம் பயன்படுத்தும் பவர் மொழிபெயர்ப்பில் இவ்வாறு உள்ளது.
"தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்"
இதை மேலெழுந்த வாரியாகப் படிக்கும்போது மேலே சொல்லப்பட்ட மனிதர்களின் 18 குணங்களை போலவே தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற குணமும் அதில் ஒன்று என்பது போல உள்ளது.
ஆனால் அதன் அர்த்தம் அப்படி அல்ல.
உண்மையான அர்த்தம் இதுதான்
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற குணம் அந்த 18 குணகளை போல ஒன்று அல்ல.
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள் மேலே குறிப்பிட் 18 குணங்களை உடையவர்களாக இருப்பார்கள் என்பதுதான் 2 தீமோ 3:5 ன் சரியான விளக்கம்.
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிற குணம் அந்த 18 குணகளை போல ஒன்று அல்ல.
அதாவது தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை
மறுதலிக்கிறவர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் இருப்பார்கள்.
பல ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும் மற்றும் கத்தோலிக்க மொழிபெயர்ப்புகளிலும் இந்த அர்த்தத்தில்தான் காணப்படுகிறது.
"இவர்கள் இறைப்பற்று உடையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவர்களிடம் இராது" (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)
இந்த இடத்தில் "இவர்கள் "என்கிற வார்த்தை மிகவும் முக்கியமானது. இவர்கள் என்கிற வார்த்தை மேலே குறிப்பிட்ட குணங்களை உடையவர்களைக் குறிப்பதாகும்.
They will act religious, but they will reject the power that could make them godly. Stay away from people like that! NLT.
ஆங்கில மொழிபெயர்ப்பில் "They" என்கிற வார்த்தை முக்கியமானது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்
பாத்திரத்தின் வெளிப்புற சுத்திகரிப்பை பற்றி அதிகம் பேசிப் பாத்திரத்தின் உட்புற சுத்திகரிப்பை விட்டுவிடுகிறவர்கள், இறைப்பற்று டையவர்கள் போன்று காணப்படுவார்கள். ஆனால், இறைப்பற்றின் வல்லமையோ அவரிடம் காணப்படாது.
எசேக்கியல் சண்முகவேல்