Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

லாபான் வீட்டில்வீட்டில் யாக்கோபு கற்றுக் கொண்ட பாடங்கள்


உங்கள் சிந்தனைக்கு:
லாபான் வீட்டில்வீட்டில் யாக்கோபு கற்றுக் கொண்ட பாடங்கள்
ஏசாவின் கோபம் தணியும் மட்டும் கொஞ்ச காலம் லாபானுடைய வீட்டுக்கு யாக்கோபின் தாயும் தந்தையும் அவனை அனுப்பினார்கள்.

அந்தப் பயணத்தைத் தேவன் ஆசீர்வதித்து அவனோடு கூட இருப்பேன் என்று சொல்லியது மட்டுமல்லாமல் மீண்டும் அவனைத் திரும்ப அந்த இடத்துக்கே கொண்டு வருவேன் என்று தேவன் உறுதியளித்தார்.



லாபானுடைய வீட்டில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தங்கி வாழ்ந்தான்.
மாறுபட்ட சூழ்நிலைகளில் தன்னுடைய மிகப்பெரிய குடும்பத்தை நடத்த வேண்டிய பொறுப்பை அறிந்த யாக்கோபு தன் தகப்பன் வீட்டுக்குத் திரும்ப விரும்பினான். அதற்கு ஏற்பத் தேவனுடைய கட்டளையும் வெளிப்பட்டது இந்த 20 வருடத்தில் அவன் கற்றுக் கொண்ட பாடங்கள் அனேகம்.

1.தேவன் ஆசீர்வதிக்கும் வரை காத்திருக்காமல் தானாகவே ஏசாவின் பிறப்புரிமையை பெற்று கொண்டான். தகப்பனுடைய ஆசிர்வாதத்தை தாயினுடைய பேச்சைக் கேட்டுத் தகப்பனை ஏமாற்றி பெற்றுக் கொண்டான்.
ஆனால்தான் இந்த 20 வருட காலத்தில் அவன் பல விதங்களில் ஏமாற்றப்பட்டபோது ஏமாற்றுகிற காரியம் எவ்வளவு வலியுள்ளது என்பதை உணர்ந்தான்.

2.கர்த்தருடைய நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்து 20 வருடம் அங்கே காத்திருந்தான்.

3.தாழ்மையை கற்றுக் கொண்டான்.

4.ஆண்டவர் சொல்லும் வரை ஆண்டவர் வைத்த இடத்தில் இருப்பது என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பதை அவன் இப்பொழுது உணர்ந்து கொண்டான்.

5.காலத்துக்கு முந்தித் தான் எதையும் செய்து விடாதபடி தன்னை பாதுகாத்துக் கொண்டான்.
ஏமாற்றுக்காரனாக இருந்த யாக்கோபு இப்பொழுது விசுவாச வீரனாக மாறிவிட்டான். இனி வரப்போகிற போராட்டங்களில் கர்த்தரையே சார்ந்து இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டான்.
காலம் நமக்குக் கற்பிக்கிற பாடங்களை மாதிரி
வேறு எதுவும் நமக்குக் கற்பிக்காது.ஆதி 27:44, 28:15, 31:3

எசேக்கியேல் சண்முகவேல்