Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 6
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம்.
வேத பாடம் 6

தாவீது ஏன் யோவாபை ஏன் தண்டிக்கவில்லை?

தாவீதின் படைத்தளபதி யோவாப்.
தாவீது மரிக்கும் வரை அவன் தான் No 1 படைத்தளபதியாக இருந்தான்.

தாவீதின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். மிகச்சிறந்த போர் தளபதி.

அம்மோனியரையும் சீரியரையும் தோற்கடித்ததில் யோவாப் மிகச்சிறந்த பங்காற்றினார் ‌.2 சாமு 10:1-14
பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட பல படைத்தளபதிகளில் யோவாப் முக்கியமானவன்.

ஆரம்ப காலத்தில் தாவீதுக்கு பல போர்க்களங்களில்ச வெற்றிக்குக் காரணமாக இருந்தான்.1 இராஜா11:15-16.
மிகவும் தந்திரமானவன்.
சவுலின் படைத்தளபதி அப்னேரை தாவீதோடு நெருங்க விடாமல் தந்திரமாகக் கொலை செய்தவன்.
தாவீதின் மகன் அப்சலோமை உயிருடன் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும் அவனைக் கொலை செய்தவன்.
தாவீதுக்கு நெருக்கமாக வந்த அப்சலோமின் படைத்தளபதி அமாசாவை வஞ்சகமாகக் கொலை செய்தவன்.
தன் மகனைக் கொலை செய்த அந்த வருத்தம் தாவீதுக்கு கடைசி வரை நீங்கவில்லை.
ஆனாலும் தாவீது அவனைக் கண்டிக்கவும் இல்லை கொலை செய்யவும் இல்லை.
காரணம்,
He had no moral courage.
பத்சேபாள் விவகாரத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத அநியாயமான முறையில் பத்சேபாளின் கணவன் உரியாவை வஞ்சகமாகக் கொலை செய்வதற்கு கட்டளையிட்டான்.
அநியாயமாக அவனுடைய ரத்தம் இந்த மண்ணில் சிந்தப்படுவதற்கு காரணமாகக் காணப்பட்டான்.சங்கீ 51:14
அதனால்தான்
தன்னுடைய படைத்தளபதியை கண்டிக்க அவனால் முடியவில்லை.
எனவே அந்தப் பொறுப்பைச் சாலமோனிடம் ஒப்படைத்து விட்டான்.

தேவன் உணர்த்தும் பாடம்.
நாம் மற்றவர்களைக் குற்றம் சுமத்தும் பொழுதும் கண்டிக்கும் பொழுதும் அதைக் கண்டிப்பதற்கு முன்பு நாம் முதலில் அதற்குத் தகுதியுள்ள நபரா என்று ஆராய்ந்து யோசிக்க வேண்டும். ('Weather we have the moral right to criticize others')நம்மிடத்தில் பல்வேறு குறைகளை வைத்துக்கொண்டு தலைவன் என்கிற ஒரே காரணத்திற்காக மற்றவர்களைக் குற்றம் சுமத்துவது, சிறுமைப்படுத்துவது, தண்டிப்பது, அவமானப்படுத்துவது, கண்டிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
சாலமோன் தன் ஆட்சிக் காலத்தில் பெரிய யுத்தங்கள் எதையும் நடத்தவில்லை. சமாதானத்தின் அரசன் என்று கருதப்படுகிறார்
(Man of peace)
1நாளா22:6-10
சாலமனுடைய ஆட்சிக்காலத்தில் சிந்தப்பட்ட இந்த ரத்துளிகள்
நியாயமானதாகக் காணப்படுகிறது.
எனவே தலைவர்கள் தங்கள் ஆவிக்குரிய குணாதிசயங்களை, ஆளுமைகளை, தைரியத்தை ஒருபோதும் இழந்து விடக் கூடாது. அப்படி இழந்துவிட்டால் அவர்கள் சபைகளில் அமைப்புகளில் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்த முடியாது.