we must believe in the attributes of God.
உங்கள் சிந்தனைக்கு!
we must believe in the attributes of God.
படிக்க ரோமர் 4:17-21
"அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்"
இந்தப் பதிவில் ஆபிரகாம் விசுவாசம் பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நாம் எண்ணுகிறபடி ஆபிரகாமினுடைய விசுவாசம் கண்மூடி தனமான விசுவாசம் அல்ல.
அவனுடைய விசுவாசம் தேவனுடைய சில குணாதிசயங்களை (Attributes)சார்ந்து இருந்தது. தேவனை பற்றிய சில அடிப்படையான சில குணங்களை நம்பி விசுவாசித்தான். அந்த விசுவாசம் தேவனுடைய படைப்பின் வல்லமை மற்றும் உயிர்தெழுதலின் வல்லமை ஆகியவற்றை சார்ந்து இருந்தது.
இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைக்கிற தேவனை விசுவாசித்தான் என்று நாம் வாசிக்கும்போது நமக்கு நினைவில் வருவது எபி12;2தான். ("இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால்உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்;)
ஆபிரகாம் தான் விசுவாசிக்கும் தேவன் சிருஷ்டிப்பின் தேவன்(God of creation) என்று விசுவாசித்தான்.
எனவே சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் தன்மூலம் வானத்தில் உள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறக்க வைக்கத் தேவனால் முடியும் என்று நம்பினான்.
அடுத்தது
அவன் ஈசாக்கை பலியிட முன்வந்தபோது அவன் தான் நம்பும் தேவன் மரித்தோரை எழுப்ப வல்லமை உள்ளவர் என்று அவன் தேவனுடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை நம்பினான்.(God of resurrection)
நாம் தேவனுடைய எந்தக் குணாதிசியங்களை நம்பி விசுவாசிக்கின்றோமோ அந்த அளவுக்கு அந்தக் குணாதிசியங்கள் நமக்குப் பலிக்கும்.
கண்மூடி தனமான விசுவாசம் அவசியம் இல்லை.
we must believe in the attributes of God.
Nothingness and death are no problem for God. Creation and resurrection are and remain the two major manifestations of God's power.
Abraham believed both.