1 அரசர்கள் புத்தகம். வேத பாடம் 7
உங்கள் சிந்தனைக்கு:
தேவ ஞானத்தை தனிப்பட்டவாழ்க்கையில் பயண்படுத்த தவறிய சாலமோன்
:
1 அரசர்கள் புத்தகம்.
வேத பாடம் 7
சாலமோனை பற்றிப் பழைய ஏற்பாட்டில் 300 இடங்களிலும் புதிய ஏற்பாட்டில் 12 இடங்களிலும் வருவதாக வேத பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் இவன் பெயர் காணப்படுகிறது.
அவன் சிறப்புக்கும்(Splendor) ஞானத்திற்கும்(Wisdom). எருசலேம் ஆலயத்தைக் கட்டினவனாகவும், அடையாளப்படுத்தப்படுகிறான்.
அது தவிர திருக்கோவிலில் அவன் பெயரில் மண்டபம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
மத்1-6-7,6:29,லூக்12:27.யோவா 10:23
தாவீதும் சாலமோனும் சங்கீதங்களை இயற்றியதாகச் சொல்லப்பட்டாலும் சங்கீதங்களின் புத்தகத்தில்72,127ம் சங்கீதங்கள் மட்டும் இவனுடையதாகச் சொல்லப்படுகிறது.
வேதத்தில் காணப்படுகின்ற நீதிமொழிகள் இவன் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
அதே வேளையில்
அவனுடைய 3000 நீதிமொழிகள் வேத புத்தகத்தில் காணப்படவில்லை.
தாவீதை போல எந்தப் போர்க்களத்தையும் சந்திக்காதவன்.
தகப்பனுடைய நிழலிலும் ஆசீர்வாதத்திலும் செல்வத்திலும் வாழ்ந்தவன்.
கடவுள் அவன் கனவில் தோன்றிஅவனிடம் என்ன வேண்டும் என்று கேட்டபோது மிகப்பெரிய அரசாங்கத்தை நிர்வாகம் பண்ண தேவையான ஞானத்தை கேட்டான்.3:5-12
அந்த ஞானத்தை தன் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன்படுத்தத் தவறி விட்டான்.
தேவன் கொடுத்த ஞானத்தை கொண்டு தன்னுடைய அரசாங்கத்தை நிர்வாகம் பண்ணினான்.
தேவனுடைய ஆலயத்தைக் கட்டினான்
ஆனால் தேவனுடைய உறவில் கரிசனையற்ற அரசனாகக் காணப்பட்டான்.
அவனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
ஆரம்ப நாட்களிலேயே
சாலொமோன் எகிப்தின் அரசனான பார்வோனுடன் நட்புக்கொண்டு அவனுடைய மகளைத் திருமணம் செய்தான்.
இதுதான் அவன் செய்த முதல் திருமணம்.
1 இராஜாக்கள் 3:1
இது அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகளின் ஆரம்பம்.
அதன் விளைவு அவனுக்கு 700 மனைவிகளும்
300 வைப்பாட்டிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.11:3
தாவீதைப் போலப் பாவத்திற்கு மனம் திரும்பாத சிந்தனை உள்ளவனாய் இருந்தபடியினால் தாவீதை கண்டித்த நாத்தான், காத் போன்ற தீர்க்கதரிசிகளை இவனுடைய வாழ்க்கையில் இவன் சந்திக்ககும் வாய்ப்பைக் கடவுள் தரவில்லை.
இதுவும் அவனுடைய சீர்கேட்டுக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.
மிகப்பெரிய செல்வத்தைப் பெற்றான். ஞானத்தை பெற்றான் செல்வாக்கைப் பெற்றான். ஆனால் தேவனோடு உள்ள உறவு இழந்து விட்டான்.
அநேக நாடுகளுள் அவனைப் போல ஒரு அரசனும் இருந்ததில்லை.
"அவனுடைய இறைவன் அவனில் அன்புவைத்து, இஸ்ரயேல் முழுவதற்கும் அவனை அரசனாக்கினார். அப்படியிருந்தும் அந்நிய நாட்டுப் பெண்களால் அவன் பாவத்துக்கு இழுபட்டான்."
நெகேமியா 13:26
சாலமோனுடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருந்தாலும் முக்கியமான இரண்டு பாடங்கள்.
1. திருமண உறவில் புறயின மக்களோடு கலக்கக் கூடாது.
2. தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கையை எந்தக் காரியத்திற்காகவும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
உலக செழிப்பு அல்ல ஆவிக்குரிய வளர்ச்சியே முக்கியம்.