கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் தளர்வுகள் கிடையாது.
கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதில் தளர்வுகள் கிடையாது.
There is no relaxation in obeying the God's word.
இதற்குச் சிறந்த உதாரணம் சவுலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான்.
இஸ்ரவேல் ஜனங்களின் அரசனானகி எதிரிகளை நோக்கிப் படையெடுப்பதற்கு முன்பாகவே தேவனுடைய கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாமல் அதற்குத் தளர்வுகளை ஏற்படுத்திக் கீழ்ப்படியாமல் போனார்.
இதைப் பற்றிய நிகழ்வுகளை 1 சாமுவேல் 13வது அதிகாரத்தில் பார்க்கலாம்.
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.
கடவுளுக்குத் தகன பனி செலுத்தி விட்டுப் போர்க்களத்துக்கு செல்ல வேண்டும். அதற்காகக் காத்திருந்தான். ஆனால் சொன்னபடி சாமுவேல் தீர்க்கதரிசி பலியிடுவதற்காக ஏற்ற நேரத்தில் வரவில்லை.
நேரமாக ஆக ஆகச் சவலுடன் இருந்தவர்கள் அவனை விட்டு விலகிப் போனார்கள். இதனால் பதட்டமடைந்த சவுல்
சர்வாங்க தகனபலிகளை தானே கர்த்தருக்கு செலுத்தினான். அவன் சாமூவேல் தீர்க்கதரிசி இனிவரமாட்டார் என்று நினைத்திருக்கலாம்.
என்னோட இணைந்த போர் வீரர்களும் போய்விட்டால் போர்க்களத்தில் தோற்றுப் போய் விடுவோம், எனவே இதை ஒரு விதிவிலக்காகக் கருதி தேவனுக்கு தகன பலிகளை செலுத்த முன் வந்திருக்கலாம்.
ஏற்கனவே அவனுடன் இருந்த 3000 பேர் இறுதியில் 600 பேராக மாறிவிட்டார்கள்.
பெலிஸ்தியர்கள் ஆயுதபலத்தில் இஸ்ரவேல் ஜனங்களைவிட மேலானவர்கள்.
அவர்களுடைய ஆயுதங்கள் கையிருப்பு மிக அதிகம்.
இந்தச் சூழ்நிலைகள் எல்லாம் சவுலை மனம் மாற வைத்தது.
சூழ்நிலை பார்த்துக் கர்த்தருடைய கட்டளை மறந்து விட்டான்.
ஆனாலும் இது கர்த்தருடைய பார்வையில் பெரிய பாவம். தகன பலிகளை ஆசாரியன் மட்டும் தான் தேவனுக்கு செலுத்த வேண்டும் என்பது கர்த்தருடைய கட்டளை.
சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இந்த விதி மீறப்படக் கூடாது.
ஆனால் சவுல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அந்த விதிகளை மீறினான்.
சாமுவேல் தீர்க்கதரிசி இதைப் பற்றிக் கேட்டபொழுது கொஞ்சமும் பதட்டப்படாமல்.
“மனிதர் என்னை விட்டுச் சிதறிப்போனதையும், நீர் குறிப்பிட்ட நாளில் இங்கு வராததையும், பெலிஸ்தியர் மிக்மாசிலே கூடிவந்திருப்பதையும் நான் கண்டேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு வரப்போகிறார்களே. நானோ இன்னும் யெகோவாவினுடைய தயவைத் தேடவில்லை’ என்று எண்ணியே தகன காணிக்கையைச் செலுத்தத் துணிந்தேன்” என்றான்.
1 சாமுயேல் 13:11,12
தான் செய்தது தேவனுடைய கட்டளைகளுக்கு மாறானது என்பதை புரியாமல், கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஒரு விதிவிலக்காக இது செய்திருக்கலாம்.
ஆனால் இந்தக் காரியத்தில் இதற்குச் சாமுவேல் தீர்க்கதரி சொன்ன பதில் முக்கியமானது.
"புத்தியீனமாய் நடந்துவிட்டாயே! உன் இறைவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த கட்டளையை நீ கைக்கொள்ளவில்லை" சாமுவேல் தீர்க்கதரிசி உரைத்தார்.
ஆம் தேவனுடைய கடைகளைக் கடைபிடிப்பதில் விதிவிலக்குகள், சமரசங்கள், தளர்வுகள் எதுவும் கிடையாது.
Our urgency or necessity is not an excuse for disturbing God's word.
நம்முடைய மூளை அறிவைக் கொண்டு கடவுளுடைய கற்பனைகளுக்கு விலக்கு கேட்க முடியாது.
இந்தக் கீழ்படியாமைக்கு அவன் கொடுத்த விலை மிக அதிகம்.
ஒரு வேளை சவுல் மீது நாம் பரிதாபம் கொள்ளலாம். அவனை விட்டுக் கர்த்தர் விலகி விட்டார்.அரசு அவனை விட்டுக் கடந்து போய்விட்டது. இது நம்முடைய பார்வையில் கர்த்தருடைய தண்டனை அதிகமானதாக இருக்கிறது என்று எண்ணலாம். ஆனால் கடவுளுடைய பார்வை என்பது வேறு.
சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய செயலைக் காட்டிலும் கீழ்ப்படிதிலே மேன்மையானது.
We cannot relax God's rule.But it is in God' hand.
ezekiel shanmugavel