Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 6
உங்கள் சிந்தனைக்கு.

1 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 6
புதிய நிர்வாகத்திற்கான வெற்றி சூத்திரம்

புதிய நிர்வாகமும் களையெடுப்பும்.

தாவீது தான் மரிக்கப்போகின்ற இறுதி காலகட்டத்தில் தான் அரசனாக்கிய தன்னுடைய மகன் சாலமோனுக்கு கொடுத்த அறிவுரைகளில் இரண்டு பக்கங்கள் உண்டு.

1 அவன் எப்படி ஞானமுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும் என்பது.
2. இரண்டாவது புதிய நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என்கிற அறிவுரைகள்.

எப்பொழுதுமே புதிய தலைவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும்பொழுது அவர்கள் செய்கின்ற இரண்டு காரியங்கள்.

ஒன்று தனக்கு வேண்டிய நபர்களை முக்கியமான பொறுப்புக்களில் நியமனம் செய்வார்கள்.

அடுத்தது பழைய நிர்வாகத்தில் இருக்கின்ற தேவையில்லாதவர்களை விலக்கி வைப்பார்கள்.
(களையெடுப்பு)

இது எல்லா நிர்வாகத்திலும் தலைமைப் பொறுப்பு மாறும்போது நடக்கின்ற காரியம்.

இதைத்தான் தாவீது 2000 ஆண்டுகளுக்கு முன்பாகச் சாலமோனுக்கு எடுத்துரைக்கின்றான்.

களையெடுப்பு:
யோவாப்.
தாவீது மரிக்கும் வரை தாவீதின் No 1 படைத்தளபதியாக இருந்தவன்.

ஆரம்ப காலத்தில் தாவீதுக்கு பல போர்க்களங்களில் வெற்றிக்குக் காரணமாக இருந்தான்.
1 இராஜா11:15-16.
ஆனால் மிகவும் தந்திரமானவன்.சவுலின் படைத்தளபதி அப்னேரை தாவீதோடு நெருங்க விடாமல் தந்திரமாகக் கொலை செய்தவன்.
தாவீதின் மகன் அப்சலோமை உயிருடன் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும் அவனைக் கொலை செய்தவன்.

தாவீதுக்கு நெருக்கமாக வந்த அப்சலோமின் படைத்தளபதி அமாசாவை வஞ்சகமாகக் கொலை செய்தவன்.
தன் மகனைக் கொலை செய்த அந்த வருத்தம் தாவீதுக்கு கடைசி வரை நீங்கவில்லை.
எனவேதாவீது அவனைக் குறித்து எச்சரித்து அவனுக்குரிய தண்டனை வழங்கும்படி‌ மறைமுகமாகக் கேட்டுக் கொண்டான்.
அதன்படி சாலமோன் அவனை ஏற்ற நேரத்தில் கொலை செய்தான்.

யோவாப் சாலமோனுக்கு விரோதமாகத் தாவீதின் இன்னொரு மகனான அதோனியாவின் பக்கம் சாய்ந்தபோது அவன் சாலமோன் அனுப்பிய பெனாயாவினால் கொலை செய்யப்பட்டான்.

அதைப் போலச் சீமேயுவையும்
"அவனுடைய நரைத்த தலையை இரத்தத்துடன் பாதாளத்துக்குப் போகக் கட்டளையிட்டான்” இதையும் தாவீது நிறைவேற்றினான்

அதே வேளையில்
கீலேயாத்தியனான பர்சிலாயின் மகன்களுக்கு இரக்கம் காட்ட சொன்னான்.
1 இராஜாக்கள் 2:7
சாலமோன் இதையும்நிறைவேற்றினான்.
தாவீது சொன்ன ஆலோசனைகளைச் சாலமோன் 100% அப்படியே நிறைவேற்றினான்.

ஆனால் இன்றைக்கு இயக்கங்களின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்கும்பொழுது இரண்டையும் செய்கிறார்கள். அத்தோடு தேவையில்லாத வேறு இரண்டு காரியங்களையும் செய்கிறார்கள்.
1. தமக்கு வேண்டியவர்களை அதே நேரத்தில் தகுதி இல்லாதவர்களை, உண்மை இல்லாதவர்ளை உழைக்காதவர்களை நேர்மையில்லாதவர்களை தங்களுக்கு வெண்சாம்பரம் வீசுகிறவர்களை உயர் பதவிகளில் நிறுத்தி அழகு பார்க்கிறார்கள்.

அதே நேரத்தில் இன்னொரு தவறையும் செய்கிறார்கள்
பழைய நிர்வாகத்தில் நேர்மையாக உண்மையாகக் கர்த்தருக்காக உழைத்தவர்களை கருவேப்பிலை போலத் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
இந்த இரண்டு மாபெரும் தவறுகள் நிர்வாகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது.
நேர்மையானவர்களை வெளியேற்றுவது நிர்வாகத்திற்கு அழகல்ல.
தகுதி இல்லாதவர்களை உயர்த்துவது ஆபத்தானது.
இன்றைக்கு பல இயக்கங்களின் இந்தக் காரியங்கள் நடைபெற்று நிர்வாகங்கள் சீரழிக்கப்படுகிறது.
தேவனுடைய பிள்ளைகள்‌ தேவனுக்கென்று கொடுக்கும் அர்ப்பணிப்புள்ள காணிக்கைகள் தவறான முறையில் கையாளப்படுகிறது.
அது நாளடைவில் மிகப்பெரிய சீர்கேட்டை விளைவித்து விடுகிறது.
இயக்கங்கள் இயந்திரங்களாக மாறிவிடுகிறது.
அவைகள் நினைவுச் சின்னங்களாகக் காலப்போக்கில் மாறிவிடும்.
தாவீது சாலமனுக்கு கொடுத்த அறிவுரைகள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடியவைகள் அவற்றோடு எதையும் கூட்டமும் வேண்டாம் கழிக்கவும் வேண்டாம்.இதுதான் புதிய நிர்வாகத்திற்கான வெற்றி சூத்திரம்