Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இயேசு கிறிஸ்து யார் என்கிற அறிவு
நமது  பந்தயப்பொருளை   இழந்துபோகும்படி  பிசாசின்  கள்ள போதனைகளினால் வஞ்சியாதிருக்கப்படாதிருக்க நாம் அறிந்து கொள்ள  வேண்டிய   நான்கு  வழிகள்.

             கொலோ  2 வது  அதிகாரம்.

1 இயேசு கிறிஸ்து யார் என்கிற அறிவு
(கொலோ   2:3,9,10)
      Know who Jesus is

2 அவர் நமக்குச் செய்த காரியங்கள் (2:13-15)
        Know what He has done

3  நாம்  யார் (2:10,12)
  Know who we  are

4 நாம்  செய்ய  வேண்டிய காரியம்(2:6,7)
      Know what we are to do for Him

கொலோசெயர் நிருபம் முழுவதையும்  நாம் படித்து ஜெபத்தோடு  தியானித்தால் சாத்தானின் தந்திர வழிகளில் சிக்கி  கொள்ளாமல்   நமது  பந்தயப்பொருளை   இழந்து போகமாட்டோம்.

குறிப்பாக இந்தக் கடிதத்தின் இரண்டாவது அதிகாரம் மிக முக்கியமானது. ஆழமான சத்தியங்கள் நம்மால் கிரகித்துக் கொள்ள முடியாத அநேக ரகசியங்கள் இந்த அதிகாரத்தில் காணப்படுகின்றன.

இன்றய  சபைகளுக்குக் கொலோசெயர் நிருபம் ஒரு எச்சரிக்கை  நிருபம்.
இந்த அதிகாரத்தின் மிகச்சிறந்த இரண்டு வசனங்கள் 9 மற்றும் 10

“சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.”
கிறிஸ்துவுக்குள் நாம் நிறைவாக இருக்கிறோம்

இதற்கான காரணத்தை வசனம் 9ல் நாம் பார்க்கலாம்.

ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது.

கொலோசேயர் 2:9.

Christ all the fullness of the Deity lives in bodily form,.
கொலோ 2:9,10.

இத்தனை தடவை படித்தாலும் இந்த இரண்டு வசனங்களின் ஆழத்தை அதனுடைய ஆழத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
"Paul gives one of the most sublime and unmistakable verses  in the Bible on the deity of Lord Jesus Christ."William McDonald.

நாம் கிறிஸ்துவுக்குள் முழு நிறைவாக இருக்கிறோம்.
We are complete in him
We have to trust the all sufficiency of Christ.


நம்முடைய பரிசுத்தத்திற்கு நம்முடைய நீதிக்கு நம்முடைய ஞானத்திற்கு வாழ்க்கை முறைக்குத் தேவையான அனைத்தும் அவரிடத்தில் இருக்கிறது.
அதை நாம் இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனக்குள்ள ஒரே வருத்தம் இந்தச் சத்தியம் ஆழமாகச் சபைகளில் குறிப்பாகப் பெந்தகோஸ்தே சபைகளில்‌ பிரசிங்கிக்கப்படவில்லை என்பதுதான்.
இந்தப் போதனைகள் ஆழமாகப் போதிக்கப்பட்டு இருந்தால் கழட்டுவது, சேர்ப்பது, திருமணம் செய்யாத வாழ்க்கை உயர்ந்தது என்று போதிப்பது உடைகளைப் பற்றிய போதனை ஆராதனை விட ஆராதனை நாட்களைப் பற்றிய போதனைகள் இவைகள் அனைத்தும் குறிப்பிட்டு எல்லைக்கு மீறிப் பின்பற்றப்படாமல் இருந்திருக்கும். இது அடியேன் உடைய தாழ்மையான எண்ணம்.

கொலோ 2 இரண்டாவது அதிகாரத்தைப் பற்றி Herald Wlilmington இப்படி கூறுகிறார்
What a great truth!
What a great declaration!
What a great affirmation!
What a great exhortation!. ezekiel shanmugavel