1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 9
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 9
எருசலேமில் சாலமோன் கட்டின தேவாலயம் மிகப்பிரமாண்டமானது.
அதைக் கட்டி முடிக்க ஏழு வருடங்கள் ஆயிற்று.
டன் கணக்கில் தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் தொழில் நுட்ப கலைஞர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது.
புறயின மக்கள் இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு தங்களால் இயன்ற பங்களிப்பு செய்தார்கள்.
ஆலயத்தில் ஏறெடுக்கப்படும் ஜெபத்திற்கு தேவன் சிறப்பான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தார்.
அந்த ஆலயத்தில் கடவுளுடைய நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கி அவருடையகண்களும் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும் என்று வாக்களித்தார்
1 இராஜாக்கள் 9:3.
அப்படி கட்டப்பட்ட அந்த ஆலயத்தின் ஆயுட்காலம் 410 ஆண்டுகள் தான்.
காரணம் இஸ்ரேல் ஜனங்கள் தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழவில்லை
அதற்குப் பிறகு எழுப்பப்பட்ட ஆலயமும் 480 ஆண்டுக் காலம் நீடித்தது.
அதுவும் இறுதியாக ரோம சாம்ராஜ்யத்தால் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
என்னதான் பிரம்மாண்டமான ஆலயங்களில் தேவன் குடியிருந்தாலும் அதைவிட மேன்மையாக இந்தப் புதிய ஏற்பாட்டு காலத்தில் தம்முடைய சரீரத்தில் கடவுள் ஆலயமாக இருக்கிறார்.
நாம் வேதத்தைப் படிக்கும் போதெல்லாம், ஆராய்ச்சி செய்யும் போதெல்லாம் ஆராதிக்கின்ற நேரங்களில் எல்லாம் அவர் நமக்குள்ளே உலாவித் தங்கி நம்மோடு வாசம் செய்து வாழ்கிறார்.
எருசலேம் தேவாலயத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை சந்தித்த அனுபவங்களைவிட தேவன் அவர்களோடு இடைப்பட்ட காரியங்களைவிட இன்றைக்கு புதிய ஏற்பாட்டு காலத்தில் இலவசமாக 24 மணி நேரமும் அவர் நம்மில் வாசம் செய்கிற இந்த அனுபவம் உலகத்தில் வேறு எந்த மக்களுக்கும் கிடைக்கவில்லை.
கடவுளை இவ்வளவு நெருக்கமாக உணர்வுபூர்வமாக அவரையும் அவருடைய பிரசன்னத்தை உணர்கிற, அனுபவிக்கிற நம்மைவிடப் பாக்கியம் பெற்ற ஜனங்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
இதை
விசுவாசிகள் உணரும்பொழுது, தியானிக்கும்பொழுது விசுவாசிகள் நிச்சயமாகப் பழைய வாழ்க்கையை வாழமாட்டார்கள். பின் மாற்றம் அடைய மாட்டார்கள்.
இரகசிய பாவத்தில் ஈடுபட மாட்டார்கள்
விசுவாசத்தை ஒருபோதும் மறுதலிக்க மாட்டார்கள்
கடவுள்தாமே நம்முடைய சரீரத்தில் தங்கி இருக்கிறார் என்பதை பற்றி உள்ள உன்னதமான வெளிப்படுத்தலை ஒவ்வொருவருக்கும் கடவுள் தருவாராக
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
1 கொரிந்தியர் 3:17
" நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே."
2 கொரிந்தியர் 6:16
நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம் என்கிற சத்தியம் வேறு எந்த மார்க்கத்திலும் அதிகமாக வலியுறுத்தப்படாத ஒன்று.
மனிதனும் தெய்வமாகலாம் என்று மற்றவர்கள் சொல்லுவார்கள்.
ஆனால் அந்தத் தெய்வமே நம்மிடத்தில் இருக்கிறார் என்பது எவ்வளவு மகிமையான காரியம்