Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1அரசர்கள் புத்தகம் வேத பாடம் 10
உங்கள் சிந்தனைக்கு
1அரசர்கள் புத்தகம் வேத பாடம் 10
சாலமோன்
கடவுளின் கட்டளைப்படி மிகப் பிரம்மாண்டமான மகிமையான ஒரு தேவாலயத்தைக் கட்டினான். அதைக் கட்டி முடிக்க அவனுக்கு ஏழு ஆண்டுகள் ஆயிற்று.
ஆனாலும் உடன்படிக்கைப் பெட்டியும் ஆசரிப்பு கூடாரத்தின் தளவாடங்களும் ஆலயத்திற்குள் கொண்டுவரப்படவில்லை.
ஆலயம் கட்டி முடித்துப் பதினோரு மாதங்களுக்குப் பிறகு சாலமோன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான்.
1 இராஜாக்கள் 8:1-2
Solomon summoned the elders, heads of the tribe, and the chiefs of Israelite families.

கடவுளின் பெட்டியையும்
ஆசாரியரும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களை லேவியரும் தூக்கிக்கொண்டு வந்தனர். அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின் முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை.
1 இராஜாக்கள் 8:4-5

அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின் கீழ் வைத்தார்கள்.
1 இராஜாக்கள் 8:6.

அதன் பிறகு
ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது, கடவுளின் ஆலயத்தை மேகம் நிரப்பியது. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் கடவுளின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது.
1 இராஜாக்கள் 8:10-11

இந்த நிகழ்வுகளில் நாம் கவனிக்க கூடிய காரியம் ஒன்று உண்டு
மிகவும்பிரம்மாண்டமான கட்டப்பட்ட ஆலயம்.
தேவனுடைய திட்டத்தின் படி கட்டப்பட்ட ஆலயம்.
இஸ்ரேல் மக்கள் ஒருமித்து ஆதரவு கொடுத்து இணைந்து கட்டிய ஆலயம்.
இந்தநிகழ்வில் இஸ்ரவேல் கோத்திரத்து தலைவர்களும் லேவியர்களும் ஆசாரியர்களும் ஏன் சாலமோன் அரசனும் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள்.
இவைகள் எல்லாம் சிறப்பான காரியங்கள் தான் ஆனாலும் அதைவிட மகிமையான காரியம் ஒன்று உண்டு அது என்னவென்றால் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைத்துவிட்டு ஆசாரியர்கள் வெளியே வந்தவுடனே தேவனுடைய மகிமை அளவு இல்லாமல் நிரப்பிய அந்த நிகழ்வுதான். இந்த நிகழ்வோடுதான் தேவனுடைய ஆலய பிரதிஷ்டை என்கிற ஒரு நிகழ்வு முடிவடைகிறது.
உடன்படிக்கைப் பெட்டி என்பது தேவனுடைய சமூகத்தைக் குறிப்பது.
Symbol of presence of the Lord
உடன்படிக்கைப் பெட்டி என்பது இயேசு கிறிஸ்துவை குறிப்பது. (Typical of Christ)
அந்த உடன்படிக்கையில் இருந்தது கடவுள் கொடுத்த கட்டளைகள்.

நம்முடைய வாழ்க்கையில் இயேசு கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகளும் நம்மோடு இல்லாவிட்டால் நாம் மகிமை நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ முடியாது.
எவ்வளவுதான் நம்முடைய வெளித்தோற்றம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தாலும், ஆதரவாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், நமக்காக ஜெபிக்க கூடியவர்கள் எவ்வளவு சிறந்த ஊழியக்கார்களாக இருந்தாலும் தேவனுடைய பெட்டியாகிய இயேசு கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகளும் நம்மோடு இல்லாவிட்டால் நாம் இயேசுவுக்காக அவர் மகிமை வெளிப்படும்படியான ஒரு வாழ்க்கை நிச்சயமாக வாழ முடியாது.
நம்முடைய மையப்புள்ளி இயேசு கிறிஸ்து தான். நம்முடைய வாழ்வாதாரம் வசனம் தான்.
இயேசு கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தைகளையும் நாம் ஒதுக்கித் தள்ளி விட்டு வாழ்கின்ற வாழ்க்கை சாலமோன் கட்டி 11 மாதங்கள் எதுவுமே நடைபெறாமல், இருந்த தேவப்பிரசன்னம் இல்லாமல் இருந்த அந்த ஆலயம்போல் இருக்கும்.

அதுபோல் இன்றைக்கு ஆலயங்கள் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கலாம் கோடிக்கணக்கில் செலவழித்து உலக மக்களை அசத்தலாம்
ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து செல்லலாம்.
மிகப்பெரிய தேவனுடைய ஊழியர்கள் பிரசங்கம் பண்ணலாம். ஆனால் அந்தச் சபையில் கிறிஸ்து உண்மையான ஆவிக்குரிய தலைவராக இருக்கிறாரா?

அவருடைய வார்த்தைகள் கலப்படம் இல்லாமல் போதிக்கப்படுகிறதா?
அந்தச் சபையில் தேவன் மகிமைப்படுகிறாரா ?அல்லது மனிதர்கள் உயர்த்தப்படுகிறார்களா?
காணக்கூடிய கட்டிடத்தில் மாமிச கண்ணுக்குப் புலப்படாத தேவனை உணர முடிகிறதா?
ஆதி நாட்களில் சிறிய சபைகளில் கூடாரங்களில் ஆராதனையில் நான் பெற்ற மகிழ்வு இன்று மெகா‌ சபைகளில் நான் தேவ பிரசன்னத்தை உணர முடியவில்லை. இதுஎன்னுடைய பார்வை.
அவ்வளவு பிரம்மாண்டமான ஆலயம் கட்டப்பட்டு 500 ஆண்டுகளைக் கூடத் தாண்ட முடியவில்லை. தேவன் அந்தக் கட்டிடத்தை விட்டுக் கடந்து போய்விட்டார்.
நம்முடைய வாழ்க்கையில் என்றென்றைக்கும் பிரிக்க முடியாதவைகள் இயேசு கிறிஸ்துவும் அவருடைய வார்த்தைகள் மட்டுமே