கடவுள் தம்முடைய மனதை அடிக்கடி மாற்றுகிறாரா?
*உங்கள் சிந்தனைக்கு!*
*கடவுள் தம்முடைய மனதை அடிக்கடி மாற்றுகிறாரா?*
*ஆதியாகமம் 6:6-ன் உண்மையான அர்த்தம் என்ன?*
மல்கியா 3:6-ல், “நான் கர்த்தர், நான் மாறாதவர்” என்று கர்த்தர் உறுதியாகக் கூறுகிறார். இதன் அடிப்படையில், கிறிஸ்தவ விசுவாசம் *கடவுள் மாறாதவர், மாற்றமில்லாதவர் என்று போதிக்கிறது.*
*God is immutable — கடவுள்* மாற்றமில்லாதவர்.
*கடவுள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. அவர் வாக்கு* *மாறாதவர்* .
அதே வேளையில், ஆதியாகமம் 6:6-ல், “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” என்று கூறப்பட்டுள்ளது. இதுவே பவர் மொழிபெயர்ப்பின் கருத்து.
இதை அடிப்படையாகக் கொண்டு பலர் குழம்பிப் போயிருக்கிறார்கள். “கடவுள் மாறாதவர்” என்று வேதாகமம் கூறும்போது, “கடவுள் வருந்தினார்” என்று எப்படி கூற முடியும்? என்ற கேள்விகள் எழுகின்றன.
*தேவன் மனஸ்தாபப்பட்டார்*
வேதாகமத்தில் *தேவன் “மனஸ்தாபப்பட்டார்” அல்லது “மனம் மாறினார்” என்ற கருத்து பல* *இடங்களில் காணப்படுகிறது* .
உதாரணமாக, யாத்திராகமம் 32:14 கூறுகிறது:
«“அப்பொழுது கர்த்தர் தாம் தமது ஜனங்களுக்குச் செய்வேன் என்று சொன்ன தீங்கைச் செய்யாதபடிக்கு மனம் மாறினார்.”»
இது இஸ்ரவேலர்களுக்காக மோசே பரிந்து பேசியதற்குப் பின்னர் நடந்தது.
மீண்டும், 1 சாமுவேல் 15:11-ல்:
«“சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைப் பின்பற்றாமல் விலகி, என் கட்டளைகளை நிறைவேற்றவில்லை”»
என்று கர்த்தர் கூறுகிறார்.
நியாயாதிபதிகள் 2:18; 1 சாமுவேல் 15:35; 2 சாமுவேல் 24:16; சங்கீதம் 106:45 ஆகிய வசனங்களிலும் இதுபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.
“ *மனஸ்தாபப்படுதல்” என்ற சொல்லின் பின்னணி*
“மனம் மாறுதல்,” “மனஸ்தாபப்படுதல்,” “வருந்துதல்,” “இரங்குதல்” போன்ற பல்வேறு சொற்களால் மொழிபெயர்க்கப்படும் எபிரெயச் சொல்லின் வேர் נָחַם (nāḥam / நாகம்) ஆகும் என்று வேத அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
*இந்தச் சொல்லின் ஆரம்பப் பொருள் (Root)ஆழமாக மூச்சுவிடுதல் அல்லது பெருமூச்சுவிடுதல்* *என்பதைக் குறிக்கிறது. இது* ஒருவருடைய உணர்வுகளை உடல்ரீதியாக வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது. துக்கம், இரக்கம், ஆறுதல் போன்ற உணர்வுகள் இதன் கருத்துப் பரப்பில் அடங்குகின்றன.
வேத அறிஞர் டேக்ஸ் ( *Dake) அவர்களும் இந்த வார்த்தையின்* *பின்னணியை இவ்வாறே விளக்குகிறார்* .
*தேவன் தமது திட்டத்தை மாற்றுகிறாரா?*
மனித கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இத்தகைய சொற்களின் பயன்பாடு தேவன் தமது நோக்கத்தை மாற்றியதாகத் தோன்றலாம். ஆனால் தேவனைப் பற்றிக் “ *மனஸ்தாபப்படுதல்” அல்லது “வருந்துதல்” என்று கூறும்போது,* *மனிதர்களுக்குப் புரியும் விதத்தில் தேவனை விவரிக்கும்* *ஒரு மானுட உணர்வுருவகம் ( *Anthropopathism* )*
இதன் பொருள், தேவன் மனிதனைப் போல தவறான முடிவு எடுத்துவிட்டு, பின்னர் “நான் தவறு செய்துவிட்டேன்; எனது முடிவை மாற்றிக்கொள்கிறேன்” என்று மனம் மாறுகிறார் என்பதல்ல.
ஆதியாகமம் 6:6-ல் கூறப்படும் தேவனுடைய “மனஸ்தாபம்” என்பது உலகில் தொடர்ந்து காணப்பட்ட, மனந்திரும்பாத பாவத்திற்கும் தீமைக்கும் தேவன் அளித்த பிரதிபலிப்பாகும்.
அந்த வசனத்தின் *அடுத்த பகுதி, பாவம் தேவனுடைய இருதயத்தில் வேதனையை ஏற்படுத்தியது என்று* *கூறுகிறது* . இது தேவனுடைய நோக்கத்திலோ, குணத்திலோ, சுபாவத்திலோ ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கவில்லை.
*மாறாக, தேவனுக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் உள்ளன என்பதையும்* , *மனிதர்கள் மாறும்போது அதற்கேற்ப—நன்மைக்காகவோ* *அல்லது தண்டனைக்காகவோ—அவரவர் நிலைக்கு ஏற்ப தேவன்* *பதிலளிக்கிறார் என்பதையும் காட்டுகிறது.*
ஆதியாகமம் 6:6-ன் பொருள்
ஆதியாகமம் 6:6-ஐ *இலங்கை இலகு மொழிபெயர்ப்பு* மிகவும் எளிமையாக விளக்குகிறது:
«“ *அதனால் யெகோவா பூமியில் மனிதனை உண்டாக்கியதைக் குறித்து* *வருத்தப்பட்டார்; அவருடைய இருதயம் வேதனையால் நிறைந்தது.”*
— ஆதியாகமம் 6:6»
இதன் பொருள், கடவுள் தவறு செய்துவிட்டதாக உணர்ந்து வருந்தினார் என்பதல்ல. *மனிதனுடைய பெருகிவந்த பாவமும் தீமையும் தேவனுடைய பரிசுத்த இருதயத்திற்கு வேதனையை ஏற்படுத்தியது என்பதே இதன் பொருள்.*
கடவுள் தவறு செய்வதில்லை. எனவே, மனிதனைப் போல தவறான முடிவு எடுத்துவிட்டு, செய்த காரியத்திற்காக அவர் வருந்துவதுமில்லை.
*கடவுள் மாறாதவர்!*
*He is Immutable!*
அவருடைய சுபாவம் மாறாது.
அவருடைய பரிசுத்தம் மாறாது.
அவருடைய வாக்கு மாறாது.
அவருடைய நோக்கம் தோல்வியடையாது.
மனிதன் மாறும்போது, மாறிய மனிதனுக்குத் தேவன் தமது மாறாத நீதியின்படி பதிலளிக்கிறார்.
குறிப்பு
*இந்த செய்தி "Hard sayings"என்கிற புத்தகத்தை தழுவி எழுதப்பட்டது*