எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1ன்விளக்கம் (2)
உங்கள் சிந்தனைக்கு !
எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1ன்விளக்கம் (2)
முற்காலத்தில் இறைவன் பலமுறை, வெவ்வேறு விதங்களில் இறைவாக்கினர்கள் மூலமாய் நமது முற்பிதாக்களுடன் பேசினார்.
எபிரெயர் 1:1
''இந்தக் கடைசி நாட்களில் '' ''அல்லது இவ்விறுதி நாள்களில்'' என்றால் என்ன அர்த்தம்?
ஆங்கில மொழிபெயர்ப்பில் “in these last days “என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு விளக்கத்தைக் கொடுக்க முடியாது.
காலத்தை இரன்டு வகையாகப் பிரிக்கலாம்.
ஒன்று தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினபூர்வகாலங்கள்.
.அடுத்தது குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றின தற்போதய காலம்.
ஆங்கிலத்தில் "has in these last days spoken to us by His Son,"என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு முறை அல்லது யுகம் ( Dispensation or system period ) முடிந்து இன்னொரு முறையின் ஆரம்பம்.
It is the termination of the period assigned for the duration of the Mosaic economy and the beginning of a new era of Jesus Christ. John Brown
மோசேயின் பிரமாணங்களுக்கு அளிக்கப் பட்ட காலம் முடிவு பெற்று தேவனுடைய குமாரனின் ஆளுகையின் ஆரம்பம் என்று பொருள்.
“இந்தக் கடைசி நாட்களில்” 'அல்லது இவ்விறுதி நாள்களில்' என்றால் குமாரன் மூலமாகத் தொடங்கும் கிருபையின் யுகத்தின் நாட்கள் என்று அர்த்தம்.
இதைப் பவுலடியாரும் பல நேரங்களில் குறிப்பிடுகிறார் .
குறிப்பாக கலா 4:4 ல் இவ்வாறு எழுதுகிறார் "காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்."
இங்கு “காலம் நிறைவேறினபோது” என்கிற வார்த்தையைக் கவனிக்க வேண்டும்
மேலும் எபே 4:9 ல் "காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி' என்றும் சொல்லுகிறார்.
இதே எபிரேய நிருபத்தில் இவ்வாறு கூறப்படுகிறது.
"அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்."9:26
இங்கு “இந்தக் கடைசிக்காலத்தில்” என்பதை கவனிக்கவும்.
எனவே இறுதி காலம் என்பது யூதர்களுடைய முறை முடிந்து குமாரன் மனிதனாய் வெளிப்பட்ட காலத்தைக் குறிக்கிறது.
மேலும் இது தான் பிதாவின் இறுதி வெளிப்பாடு (Final revelation )
‘He(Father) has nothing now in reserve.He has no futher revelation to make’-Arthur W. Pink
இனி புதிதாக எந்த வெளிப்பாடும் கிடையாது.
Jesus Christ is the final spokesman of the deity manifested in the last days.
இறுதி காலம் என்பது புதிய திராட்சை ரசம்
இறுதி காலம்என்பது நிஜம்
பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின பூர்வகாலங்கள் என்பது நிழல்
பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினபூர்வகாலங்கள் என்பது பழைய திராட்சை ரசம்
தொடரும்
Ref 1 Exposition of the The Epistle to Hebrews by JOHN BROWN
2. The Daily Study Bible “The letter to Hebrews “By WILLIAM BARCLAY
3. An Exposition of Hebrews by ARTHUR W.PINK
4. The Bible Exposition commentary by WARREN W. WIERSBE