1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 14
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 14
யூதர்களின் முதல் அரசன் சவுல்.
இவன் அரசாண்ட காலத்தில் எல்லா யூத இனக் குழுக்களும் (Tribes)ஒன்றாக இணையவில்லை. எல்லா கோத்திரங்களையும் இணைத்து ஒரு ஒருமித்த யூதர்களுக்கான அரசை உருவாக்கியவன் தாவீது.
அதை வலுப்படுத்தியவன் சாலமோன்.
அதற்குப் பிறகு அவனுடைய மகன்
ரெகொபெயாம் அரசனானன்.
அவன் முதியோர்களின் ஆலோசனையைப் புறந்தள்ளிவிட்டு வாலிபர்களின் பேச்சைக் கேட்டு யூத மக்கள்மீது சாலமோன் விதித்த வரி சுமையைக் குறைக்க மறுத்துவிட்டான்.
தான் அரசன் ஆனதும் தான் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து விட்டதாக தவறாக எண்ணிவிட்டான்.
அதன் விளைவாக யூதாவைத் தவிர மற்ற கோத்திரங்கள்
அனைவரும் இணைந்து யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்து அவனைத் தங்கள் அரசனாக்கினார்கள்.
இதன் விளைவாக ஒருமைப்பட்ட யூத தேசம் வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிந்தது.
யெரொபெயாம் தலைமையில் வடக்கில் உள்ள 10 கோத்திரங்கள் இணைந்து ஒரு அரசாக மாறியது. இது இஸ்ரவேல் தேசம் என்றும் எப்பிராயீம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்த இஸ்ரவேல் தேசம் அசீரியா மன்னனால் கைப்பற்றப்படுகிற காலம்வரை(BC722) இதை ஆண்ட அனைத்து அரசர்களும் தேவனுடைய வழியில் நடக்கவில்லை.
அசீரியா அரசால் இஸ்ரவேல் தேசம் கைப்பற்றப்பட்ட பிறகு ஒரு தேசமாகப் பின்னால் உருவாக முடியவில்லை.
தெற்கில் உள்ள தேசம் யூத தேசம் என்று அழைக்கப்பட்டது.
அதன் முதல் அரசனாக
ரெகொபெயாம் மாறினான்.
இந்த யூத வம்சத்தில் இருந்துதான் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பதை மறந்து விடக் கூடாது.
இந்த தேசத்தைப் பாபிலோனியர்கள் கைப்பற்றிய காலம்வரைக்கும் ( 586) இதனை ஆண்ட அரசர்களில் சிலர் தேவனுக்கு பிரியமானவர்களாகவும் சிலர் தேவனுக்கு தூரமானவர்களாகவும் காணப்பட்டார்கள்.
பாபிலோனிய அரசாங்கத்தால் சிறைப்பட்ட மக்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு
எஸ்ரா, நெகேமியா காலங்களில் தங்கள் தேசத்திற்கு திரும்பி வந்தார்கள்.
ஆனால் அவர்கள் அடுத்த 500 ஆண்டுக் காலம் புறயின அரசர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தார்கள்.
இந்த வரலாற்றை நான் சொல்வதற்கு காரணம் ஒரு மனிதனின் பிடிவாதம், ஆணவம் முதியவர்களை மதிக்காத தன்மை தாவீது தேவனோடு இருந்து கட்டிய ஒருமைப்பட்ட தேசம் பின்னால் இரண்டாகப் பிளவுபட காரணமாயிற்று.
இந்தக் காரியங்கள் அனைத்தும் கர்த்தருடைய வார்த்தையின்படியே நடந்தாலும் மனித தவறுகளையும் நாம் மறந்து விடக் கூடாது
கிறிஸ்தவர்களாக நம்முடைய வாழ்க்கையிலும் மிகவும் விழிப்பாக இருக்காவிட்டால் சில வேலைகளில் நாம் எடுக்கிற சில தவறான தீர்மானங்கள் வாழ்நாள் தவறுகளாக மாறிவிடும்.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவுடன் நாம் ஒரு comfort zoneக்குள் வந்து விட்டோம் என்று பிரசிங்கிமார்கள் கூறுவது தவறு. நாம் ஒரு போர் வீரனாகப் போர்க்களத்துக்குள் வந்துவிட்டோம் என்பதே உண்மை.
இந்தச் சத்தியத்தை வாலிபர்களுக்குப் புரிய வைத்தால் நலம்.
வாலிபர்கள் முதியவர்களை மதித்து அவர்களது ஆலோசனைகளைப் பெற்று நடக்க வேண்டும்.
கடவுள் தங்களை உயர்த்தும் நேரம்வரைக்கும் காத்திருக்க வேண்டும்.
புதிதாக வளர்ந்து வருகிற விசுவாசிகள் எவ்வளவு தாலந்துகள் பெற்றிருந்தாலும் எவ்வளவு சிறந்த ஆராதனை வீரர்களாக இருந்தாலும் இருந்தாலும் திடீர் உயர்வை அடைய விரும்பினால்
,அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும்.
1 தீமோத்தேயு 3:6
ரெகொபெயாமின் வாழ்க்கை இன்றய இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை. இளைஞர்கள் கடவுள் அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கும் கால அட்டவணையைக் கடந்து போகக்கூடாது
இந்தப் பதிவில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் William MacDonald அவர்களின்
Believer'sBible Commentary என்கிற விளக்க உரையிலிருந்து எடுக்கப்பட்டது.
Ezekiel Shanmugavel