Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 17
உங்கள் சிந்தனைக்கு:
1 அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 17

கடவுளுக்குப் பிரியம் இல்லாமல் நடந்து தகப்பனாகிய சாலமன் தனக்கு அளித்த எல்லா ஆசிர்வாதங்களையும் இழக்க காரணமானவன்
ரெகொபெயாம்.
14:25-28

அதே வேளையில்
யெரொபெயாம் தனக்கு அரசுரிமையை வழங்கிய தேவனை மறுதலித்து விக்கிரகங்களை உருவாக்கிக் குடும்பத்தையும் தன் மகனையும் இழக்க காரணமானவன்.14:1-10.

இந்த இரண்டு அரசர்கள்மூலம் நமக்கு வேதம் உணர்த்தும் பாடங்கள்
அநேகம்.

ரெகொபெயாமை எடுத்துக் கொண்டால் அவன் எந்தப் போர்க்களத்தையும் சந்திக்காதவன்.
பாடுகளை அனுபவிக்காதவன்.
தகப்பன் சாலமோனின் ஆசிர்வாதங்களை சாலமோனுடைய மகன் என்கிற ஒரே காரணத்தால் அனைத்தையும் பெற்றுக் கொண்டவன்.

தன் மக்களுக்குத் தான் ஊழியக்காரன் என்பதை மறந்து மூப்பர்களின் ஆலோசனையைப் புறக்கணித்து விடலைகளின் துர் ஆலோசனைப்படி நடந்தான். விளைவு அவனுடைய
அரசாட்சியை பெரும் பகுதியை இழந்தான். அவனுக்கு ஆதரவாகப் பெஞ்சமின் கோத்திரமும் சிமியோன் கோத்திரம் மட்டுமே அவனோடு இருந்தது.12: 21
கடவுளின் பார்வைக்கு பொல்லாப்பை செய்துபடியினால்.
அவனது ஆட்சியின் ஐந்தாம் வருடம் எகிப்திய அரசனான சீஷாக் எருசலேமைத் தாக்கி
யெகோவாவின் ஆலயத்திலும், அரண்மனையிலும் இருந்த எல்லா செல்வங்களையும் சூறையாடிக் கொண்டுபோனான். சாலொமோன் செய்துவைத்திருந்த எல்லா தங்கக் கேடயங்கள் உட்பட அனைத்தையும் எடுத்துக்கொண்டு போனான். 14:25,26

நம்முடைய வாழ்க்கையில் நாம் நம் பிள்ளைகளுக்குச் செல்வங்களை, ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை சேர்த்து வைத்தாலும் நம் பிள்ளைகள் கர்த்தருக்கு பிரியமான வழிகளில் நடக்காவிட்டால் நாம் சேர்த்து வைத்த ஆசீர்வாதங்களை அவர்கள் இழந்து விடுவார்கள் என்பதற்கு
ரெகொபெயாமின் வாழ்க்கை வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிக்கை.

இதுபோலச் சபைகளில் போதகரின் மகன் என்கிற ஒரே காரணத்தின் அடிப்படையில் தலைமை பதவியை அடைகின்ற வாலிப தலைவர்கள் தாங்கள் சபைக்கு வேலைக்காரர்கள் என்பதையும் மூப்பர்கள் சபையின் சொத்து என்பதையும் மறந்து விடக் கூடாது


அதேபோல யெரொபெயாம் வாழ்க்கையில் கடவுள் சாதாரணமாகக் காணப்பட்ட அவனை எழுப்பித் தன் மக்களாகிய இஸ்ரயேலருக்குத் தலைவனாக நியமித்தார்.
1 இராஜாக்கள் 14:7

தாவீதின் குடும்பத்திலிருந்து அவனுடைய அரசாட்சியைப் பிரித்தெடுத்து, கொடுத்தார். ஆனால் அவன் உலோகத்தால் செய்யப்பட்ட விக்கிரகங்களான வேறே தெய்வங்களைத் தனக்கு உண்டாக்கி கடவுளுக்குக் கோபமூட்டி கடவுளைதள்ளி ஒதுக்கிவிட்டான்
அது மட்டும் அல்ல.
தானும்பாவம் செய்து இஸ்ரயேலைப் பாவஞ்செய்யப்பண்ணியதாலும் அவனுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய அழிவைத் தேவன் வரச் செய்தார்.
அவனுடைய மகனும் நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தான்‌.
நாம் கடவுளை விட்டு விலகி, மற்றவர்களுக்கு இடறலாக,,கடவுளுக்குப் பிரியம் இல்லாத வழிகளில் நடக்கும்பொழுது அதன் விளைவாக நம்முடைய குடும்பங்களிலும் தேவன் மிகப்பெரிய இழப்புகளை அனுமதிப்பார்.இதுஉண்மை.
எப்படி நாம் நம் பிள்ளைகளுக்கு செயல்பாடுகள் மூலமாக ஆசீர்வாதமாக இருக்கிறோமோ, அதுபோல நம்முடைய பின் மாற்றங்கள், பாவங்கள் மூலமாக நம்முடைய குடும்பங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நாம் மிகப்பெரிய இழப்புகளை நேரிடப் பண்ணுவோம் இதுவும் உண்மை.
எனவே ஆவிக்குரிய வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு அல்ல. நியமிக்கப்பட்ட ஓட்டத்தில் ஆசீர்வாதத்தோடு ஓட தேவன் அழைத்திருக்கிறார்.