Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 15
உங்கள் சிந்தனைக்கு:

1 அரசர்கள் புத்தகம் வேத பாடம் 15

சாலமோனுடைய மகன் ரெகோபெயாமின்‌ ஆட்சி காலத்தில் ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது.
யூதா கோத்திரத்தில் சார்ந்த ரெகோபெயாம் ஒரு பிரிவாகவும் மற்ற
அனைத்து கோத்திரங்களும் யெரொபெயாம் தலைமையில் ஒரு பிரிவாகவும் ஆக இரண்டு பிரிவுகளாகத் தேசம் பிளவு பட்டது.

நேபாத்தின் மகனான யெரொபெயாமுக்கு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய கடவுளின் வார்த்தையை நிறைவேற்றும்படி, இந்த மாறுதலான நிகழ்வுகள் நடந்தன.
1 இராஜாக்கள் 12:15

ரெகொபெயாம் கப்பம் வசூலித்து வந்த அதோராமை இஸ்ரவேலரோடு சமாதானம் பண்ண அனுப்பினான். ஆனால் எல்லா இஸ்ராயேலரும் அவனைக் கல்லெறிந்து கொன்றுவிட்டார்கள்.
அரசன் ரெகொபெயாம் எப்படியோ ஒரு வழியாகத் எருசலேமுக்குத் தப்பி ஓடினான்.
1 இராஜாக்கள் 12:18

ரெகொபெயாம் எருசலேமை வந்தடைந்தபோது, யூதா முழுவதிலும் பென்யமீன் கோத்திரத்திலும் 1,80,000 போர்வீரரை ஒன்றுகூட்டினான். இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட முன்வந்தான் ஆனால் இறைவனின் மனிதன் செமாயாவுக்கு கடவுளின் வார்த்தை வந்தது. அவன்
ரெகொபெயாமிடம் "உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரயேலருக்கு எதிராக யுத்தம்செய்யப் போக வேண்டாம். இது எனது செயல்; நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டிற்குத் திரும்புங்கள் என்று யெகோவா சொல்கிறார்’'என்றான். எனவே அவர்கள் யெகோவாவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் கட்டளையிட்டபடியே மீண்டும் வீட்டிற்கு போனார்கள்.
1 இராஜாக்கள் 12:24.
இப்படியாக ஒரு மிகப்பெரிய சகோதரர் யுத்தம் தடுக்கப்பட்டது.
ஒற்றுமையாக இருந்த யூத தேசம் இரண்டாகப் பிரிந்தது.
இதுவும் தேவனுடைய சித்தம். பிளவு பட்ட கோத்திரங்கள் மறுபடியுமாக ஒன்றாக இணைந்ததாக வரலாற்றில் காண முடியவில்லை.
சகோதரர்களின் பிரிவினைகள் வேதத்தில் பல இடங்களில் காணப்படுகின்றது.

ஆபிரகாம் லோத்தின் பிரிவு.
யாக்கோபு ஈசாவின் பிரிவினை.
இந்தப் பிரிவினை தலைமறை தலைமுறையாகக் கடந்து சென்றது.

யோசேப்பை அவனுடைய சகோதரர்கள் வெறுத்தது.
ஆரோன், மிரியாம் மோசேக்கு விரோதமாகக் குறை சொன்ன காரியம். ‌
இப்படி சகோதரர்கள் பிரிவினை, குடும்ப பிரிவினை என்பது வேதத்தில் காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
அனைவருமே தேவனால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ள பட்டவர்கள். ஆனாலும் பிரிவினைகளைத் தடுக்க முடியவில்லை.
இந்தப் பிரிவினைகள் மூலமாகத்தான் தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுகிறார்.

கடவுளுடைய திட்டத்தைக் குடும்ப பிரிவினைகள் தடுக்க முடியாது.

இந்தப் பிரிவினைகள் பல தேவனால் அனுமதிக்கப்பட்டும், சில பிரிவினைகள் மனித தவறுகளால் ஏற்படுத்தப்பட்டும் காணப்படுகிறது. இவைகள் எல்லாவற்றிலும் தேவன் தம்முடைய இறையாண்மையை நிறைவேற்றுகிறார்.
எனவே சகோதரர்கள் பிரிவினை என்பது காலம் தொட்டு காணப்படுகிறது. நம்முடைய குடும்பத்திலும் சகோதரர்கள் பிரிவினை காணப்பட்டால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அந்தப் பிரிவினைகள் கசப்புணர்ச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது.
கடவுள் நம்மை அனுமதித்த வழிகளில் நடக்க நாம் ஒப்புக்கொடுக்க வேண்டும் அவ்வளவே