Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 18
உங்கள் சிந்தனைக்கு
1 அரசர்கள் புத்தகம் வேதபாடம் 18

கடவுளை நம்பாமல்
யெரொபெயாம் செய்த மூன்று பெரும் தவறுகள்.

கடவுள் தாவீதின் வம்சத்திலிருந்து பெரும்பான்மையான பகுதிகளைப் பிரித்து யெரொபெயாமுக்கு கொடுத்து அவனை அரசன் ஆக்கினார்.
கடவுள் அவனுக்கு மிகப்பெரிய உயர்வைக் கொடுத்தார்.14; 7,8

தன்னை அரசனாக்கிய கடவுள் தன் ராஜ்யத்தை கடைசி மட்டும் தனக்கு நிலை நிறுத்துவார் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை.

அதற்கு மாறாகத் தேவனுடைய திட்டத்திற்கு விரோதமாகப் பல காரியங்களைச் செய்தான்.

எருசலேம் தேவாலயம் என்பது தேவனுடைய மிகப்பெரிய திட்டம்.
ஒருமித்த இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் வழிபடுவதற்காகத் தேவன் அந்த ஆலயத்தை ஆசீர்வதித்தார்.9: 3

இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய மையமாக எருசலேம் தேவாலயம் காணப்பட்டது.
இதை
யெரொபெயாம் புரிந்து கொள்ளாமல் தன்னுடைய ஆட்சியில் உள்ள ஜனங்கள் எருசலேம் தேவாலயத்திற்கு சென்று அங்கே தேவனை வழிபட்டால்
அவர்கள்
ரெகொபெயாம் பின்னால் சென்று விடுவார்களோ என்று பயந்தான்.

“இந்த மக்கள் எருசலேமில் உள்ள யெகோவாவின் ஆலயத்துக்குப் பலி செலுத்துவதற்குப் போனால், அவர்கள் தங்கள் தலைவனான யூதாவின் அரசன் ரெகொபெயாமின் பக்கம் சாயக்கூடும். அவர்கள் என்னைக் கொலைசெய்து அவனிடமே திரும்புவார்கள்” என்று நினைத்தான்.
1 இராஜாக்கள் 12:27
இந்தப் பயத்தின் விளைவாக அவன் கடவுளை ஆராதிக்க எருசலேமுக்கு பதிலாக இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்தான்.
இது அவன் செய்த முதல் தவறு
அடுத்தது
அதைத் தன் கீழ் உள்ள ஜனங்கள் கடவுளை ஆராதிப்பதற்காக இரண்டு தங்க கன்று குட்டிகளைச் செய்து அங்கே ஆராதிக்க தூண்டினான்.
இது அவன் செய்த இரண்டாவது பாவம்.
மூன்றாவது தவறு லேவியர்கள் அல்லாதவர்களை அந்த ஆலயத்திற்கு ஆசாரியர்களாக நியமித்தது.
இந்த மூன்று காரியங்களும் தேவனுடைய அநாதி தீர்மானத்திற்கு விரோதமானது.
அவன் பாவத்தின் மேல் பாவத்தைச் செய்தான்
இவை அனைத்திற்கும் காரணம் அவன் ஒரு பாதுகாப்பின்மையை உணர்ந்தான்(Insecurity).

தேவன் தனக்கு கொடுத்த ராஜ்யத்தை கடைசி மட்டும் அவர் நிலைநிறுத்திக் கொடுப்பார் என்கிறநம்பிக்கை இல்லாமல் சுய புத்தியை
சார்ந்து மிகப் பெரிய இழப்பைச் சம்பாதித்தான்.
1 அரசர்கள் 14:10-12 படித்துப் பார்க்கும்பொழுது மிகப்பெரிய ஒரு அழிவை அவனுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கடவுள் கட்டளையிட்டார்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான தேவனுடைய வார்த்தை 14:16 தான்‌.
யெரொபெயாம் செய்த பாவத்தினால் மட்டுமல்ல, இஸ்ரயேலைப் பாவஞ்செய்யப்பண்ணிய காரியமும் தேவனுடைய கோபத்தை ஏற்படுத்தியது.

பாவங்களில் இரண்டு வகை உண்டு.
1 நம்முடைய தனிப்பட்ட பாவங்கள் அது நம்மைத் தாமே அழிவுக்கு நேராக நடத்தி விடும்.

அடுத்தது நம்முடைய பாவம் மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுவது. இது பாவத்தின் இரண்டாவது கொடிய பகுதி.

இதைச் செய்ததின் மூலம் யெரொபெயாம் மிகப் பெரிய அழிவைச் சம்பாதித்தான்.
தேவன் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை அதை நாம் அனுபவிக்க தேவனே அதை வாய்க்கப் பண்ணுவார். இந்த அடிப்படை நம்பிக்கை நமக்கு மிகவும் அவசியம்.

நம்முடைய செயல்கள் ஒருபோதும் மற்றவர்களைப் பாவம் செய்யத் தூண்டுவதற்கு ஏதுவாக அமைந்து விடக் கூடாது.
மற்றவர்களுக்கு இடறலாக‌ நம் வாழ்க்கை ஒரு போதும் மாறக் கூடாது. நாம் ஒரு இடறலற்ற வாழ்க்கை வாழத் தேவன் நமக்குக் கிருபை தருவாராக


"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 18