பஞ்சத்தில் வாடிய எகிப்தியர், செழிப்பாக இருந்த யாக்கோபின் சந்ததியர்.
உங்கள் சிந்தனைக்கு :
பஞ்சத்தில் வாடிய எகிப்தியர், செழிப்பாக இருந்த யாக்கோபின் சந்ததியர்.
எகிப்து தேசத்தில் ஏற்பட்ட ஏழு வருட பஞ்ச காலத்தில் யோசேப்பு தன் தகப்பனையும், சகோதரர்களையும் பத்திரமாகக் கோசேன் என்கிற இடத்தில் குடியேற செய்து பஞ்சத்திலிருந்து அவர்களைப் பாதுகாத்தான்.
அதே வேளையில் அந்த நாட்டின் பூர்வ குடிகள், அதாவது மண்ணின் மைந்தர்கள் பஞ்சத்தில் மிகவும் பாதிக்கப்பட்டார்கள்.
தங்கள் கையில் உள்ள பணத்தை எல்லாம் பார்வோனிடம் கொடுத்து உணவை வாங்கினார்கள். பணம் காலியானபோது ஆடு மாடுகளைக் கொடுத்து உணவை வாங்கினார்கள். அதுவும் இல்லாமல் போனபோது அவர்கள் தங்கள் நிலத்தை விற்று தானியத்தை வாங்கினார்கள்.
ஆனால் அதே வேளையில் யாக்கோபும் அவனுடைய பிள்ளைகளும் இந்தப் பஞ்சத்தினால் எந்தப் பாதிப்புமின்றி பாதுகாக்கப்பட்டனர்.
குடியேற வந்தவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.
மண்ணின் மைந்தர்கள் பாதிக்கப்பட்டனர். இதைப் பற்றி ஆதி 47 :27 ல் பார்க்கும்பொழுது
"இஸ்ரவேலர் எகிப்து தேசத்தில் உள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள். அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள்."
என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது.
நமது தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக உள்ளது.
NLT ஆங்கில மொழிபெயர்ப்பில்
Meanwhile, the people of Israel settled in the region of Goshen in Egypt. There they acquired property, and they were fruitful, and their population grew rapidly.
என்று உள்ளது
Meanwhile என்கிற வார்த்தை கவனிக்க வேண்டியது.
"எகிப்தியர் பட்டினியாகக் கஷ்டப்பட்ட வேளையில் யூதர்கள் பலுகிப் பெருகினார்கள் "என்பதுதான் உண்மையான அர்த்தம்.
கர்த்தருடைய சித்தத்தின் மத்தியில் நாம் வாழும்போது நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு உண்டு.
அந்தப் பாதுகாப்பு புறஜாதிகளிலிருந்தும் நமக்குக் கிடைக்கும்.
தேவனுடைய பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு தேவனுடைய
பிள்ளைகளிடமிருந்து தான் வரும் என்பது சரியல்ல.
கர்த்தர் யாரைக் கொண்டும் தம்முடைய பிள்ளைகளைப் பாதுகாப்பார்.
நேபுகாத்நேச்சார், பார்வோன், கோரேசு என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்களுடைய காலத்தில் இஸ்ரவேல் மக்கள் கடுமையான நெருக்கப்பட்ட நேரத்தில் இவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.
நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் கர்த்தருக்கு பிரியமான இடமாக இருக்க வேண்டும்.
நம்முடைய விருப்பத்தின்படி இடங்களைத் தெரிந்துகொண்டு வாழும்பொழுது தேவனுடைய பாதுகாப்பு இருக்காது.தேவன் யாக்கோபுக்கு எகிப்த்துக்கு செல்ல அனுமதி கொடுத்துப் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
நம்முடைய வீடு, தொழில், வேலை ,அலுவலகம் இவைகள் மத்தியில்
கர்த்தருடைய மக்கள் தேவனுடைய சித்தத்தின் மத்தியில் இருக்க வேண்டும்.
அதுவே நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு
.தேவன் கானானை யாக்கோபுக்கு வாக்கு தத்தமாகக் கொடுத்திருந்தாலும் உலகெங்கும் பஞ்சம் ஏற்பட்டபோது கர்த்தர் அவர்களை எகிப்துக்கு கொண்டு சென்று அவர்களைப் பாதுகாத்து அங்குப் பலுகிப் பெருக செய்து அவர்களை ஆசீர்வதித்தார்.
நானூறு வருடங்கள் அவர்களை ஆசிர்வதித்தார்.நாம் இருக்கிற இடம் நம் வாழ்கின்ற இடம் தேவன் சித்தத்தில் மத்தியில் இருக்கிற இடமா ? என்பதை நாம் முதலில் உறுதி செய்ய வேண்டும்.அதுவே நமக்கு மிகப்பெரிய பாதுகாப்பு.
நம்முடைய தேசத்தில் கூடச் சபையாக ,இயக்கமாக, குடும்பமாக நாம் தேவனுடைய சித்தத்தின் மத்தியில் வாழும்பொழுது நம்மை எதிர்ப்பவர்கள் கூட நமக்கு உதவி செய்பவர்களாக மாறுவார்கள்.