Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 அரசர்கள் புத்தகம் வேதபாடம்19
உங்கள் சிந்தனைக்கு:
.
1 அரசர்கள் புத்தகம் வேதபாடம்19

"Beware of letting other believers tell you God's will for your life, "W. Wiersbe

உங்களைக் குறித்த கடவுளின் சித்தத்தை மற்றவர்கள் உங்களுக்குச் சொல்வதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
இந்தப் புத்தகத்தின் 13 வது அதிகாரத்தில்
யெரொபெயாமை எச்சரித்த தேவனுடைய மனிதனை குறித்தும் அவனுடைய முடிவைக் குறித்து நாம் பார்க்கலாம்.

ஆரம்பத்தில் முழுமையாகத் தேவனுடைய சித்தத்தை தேவனிடத்திலிருந்து அறிந்து அதன்படி நடந்தான்.
யெரொபெயாமை எச்சரித்தான்.

அப்பொழுது அவனுக்கு எதிராக நீட்டப்பட்ட யெரொபெயாமின் கைத்திரும்ப எடுக்க முடியாதபடி மரத்துப்போயிற்று.

அதை
பழைய நிலைக்குக் கொண்டு வரத் தீர்க்கதரிசியை யெரொபெயாம் கேட்டுக் கொண்டபோது அவன் கடவுளிடம் மன்றாடி அவனுக்குச் சுகத்தை வாங்கி கொடுத்தான்.
பின்பு அந்தத் தேவனுடைய மனுஷன் கடவுளின் கட்டளைப்படி அவனுடைய வெகுமதியை வாங்க மறுத்து அவனுடன் அவனுடைய வீட்டிற்கு சென்று இளைப்பாற மறுத்து விட்டான்.
பின்பு தான் வந்த வழியே போகாமல் வேறு வழியே போனான். இந்த நிகழ்வுவரைக்கும் அவன் தேவன் சொன்ன கட்டளையை நிறைவேற்றினான்.
அதற்குப் பிறகு தான் ஒரு வயதான தீர்க்கதரிசி கடவுள் சொன்னதாகப் பொய்சொல்லி அதைக் கர்த்தருடைய வார்த்தையாக நம்ப வைத்து அவனைத் தன் வீட்டிற்கு வரவழைத்து அவனுக்கு உணவளித்தான்..
இதனிமித்தம் அவன் தேவனுடைய கட்டளையை மீறினான்.
தேவன் ஒரு திட்டத்தைக் கொடுத்திருக்கும்பொழுது அந்தத் திட்டத்தை மாற்றத் தேவன் நினைத்திருந்தால் அதை அவனிடமே சொல்லியிருப்பார். வேறொரு தீர்க்கதரிசி மூலமாகத் தேவன் சொல்லமாட்டார்.
தன்னைக் குறித்த தனது திட்டத்தைத் தன்னிடம் தான் சொல்லுவார் என்கிற புரிதல் இல்லாமல் அவன் பொய்யான தீர்க்கதரிசியை நம்பினபடியினால் அவன் வழியிலேயே ஒரு சிங்கம் எதிர் கொண்டு அவனைக் கொன்று போட்டது.

இதில் தேவன் நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய சத்தியம் என்ன. ?
கடவுள் நம்மைக் குறித்த தமது திட்டத்தை, சித்தத்தை நம்மிடம்தான் முதலில் உணர்த்துவார், பேசுவார்.
வேறு எந்த மிகப்பெரிய ஊழியக்காரர்கள் கொண்டும் அதை நமக்கு உணர்த்த மாட்டார். நம்மை அவர் மட்டுமே வழிநடத்த முடியும்.
புதிய ஏற்பாட்டில் இது நிதர்சனமான உண்மை. மற்ற ஊழியர்கள் நம்மை உற்சாகப்படுத்தலாம் ஆறுதல் படுத்தலாம் ஆலோசனைகள் கூறலாம் எச்சரிக்கையும் விடலாம் ஆனால் நம்மைக் குறித்த தேவனுடைய சித்தத்தை அவர் மட்டுமே நம்மிடத்தில் உணர்த்த முடியும் ,பேச முடியும். இதில் மூன்றாவது தனி நபர் முறையீடு என்பது வேதத்தின் படி எவ்வளவும் சரியல்ல.

இதை விசுவாசிகள், வாலிபர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் அவருடைய சித்தத்தை உண்மையாக விரும்பி அவரை நோக்கி ஜெபிக்கும்பொழுது அவரே தமது சித்ததை நமக்குப் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துவார்.
இது ஒவ்வொரு விசுவாசியின் அடிப்படை பாடமாக இருக்க வேண்டும்.
கடவுளுடைய சித்தத்தை இன்னொரு மனிதன் மூலமாக நாம் அறிய முற்படுவது ஆவிக்குரிய மடமை, முட்டாள்தனம். இது ஒருபோதும் விசுவாசிகள் அனுமதிக்க கூடாது.
அனுமதித்தால் ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு ஆவிக்குரிய மரணங்கள் ஏற்பட அநேக வாய்ப்புகள் உண்டு.

கடவுள் நமது தகப்பன். அவர் நம்மோடு பேசுகிறவர். வாழ்க்கையில் சர்ப்பத்தின் பொய்கள், சத்தங்கள் நம்மை ஆதாமை போல் நம்மை ஏமாற்றி விடும். விசுவாசிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்றைய கிறிஸ்தவ உலகத்தைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. எவ்வளவு மகா பெரிய தேவனை தகப்பனாகக் கொண்டிருக்கிற நாம் அந்த உறவைப் பயன்படுத்தத் தெரியாமல் வாடகைக்கு விட்டு விடுகிற அவலம் மகா பரிதாபமானது. கடவுளின் சித்தத்தை கடவுள் மூலமாக அறிந்து கொள்கிற மனிதனை எந்த ஒரு விபத்தும் அசைக்க முடியாது.

நம்முடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 1 யோவான் 1:3.
இந்த உறவின் ஆழம் உயரம் அகலம் நீளம் இவற்றை மனித அறிவைக் கொண்டு புரிந்து கொள்ள முடியாது ‌ இந்த உறவை நாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.