எபிரேயருக்கு எழுதிய நிருபம் 1:3 ன்விளக்கம்
உங்கள் சிந்தனைக்கு !
எபிரேயருக்கு எழுதிய நிருபம் 1:3 ன்விளக்கம்
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்தில் உள்ள மகத்தவமானவருடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
எபிரேயர் 1:3
மகிமையின் பிரகாசம் அல்லது மகிமையின் ஒளி அல்லது கடவுளின் மாட்சிமை வீசும் சுடரொளி என்றால் என்ன?
ஆங்கிலத்தில் His effulgency or radiance or brightness of His glory என்று மொழியாக்கம் பண்ணப்பட்டுள்ளது
இதன் அர்த்தம் என்ன ?
இராஜரீகம் அவர்கள் மொழியாக்கத்தில் "கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாக" காணப்பட்டார் என்று காணப்படுகிறது
சூரியனையும் அதன் வெளிச்சத்தையும் பிரிக்க முடியாது.
வெளிச்சம் இல்லாத சூரியன் என்று ஒன்றும் கிடையாது.
ஆனால் சூரியன் வேறு அதன் பிரகாசம் வேறு.
இரண்டும் வெவ்வேரானவை.
சூரியனுடைய மகிமை அதன் சூரிய கதிர்கள்தான்.
அதன் மகிமை அதன்பிரகாசம்தான்.
. All the glory of the sun is its brightness.
சூரியனுடைய பிரகாசத்தின் தன்மையும் சூரியன் வெளியேற்றும் சுடரொளியின் தன்மையும் ஒன்றே.
அதைப் போலப் பிதாவின் மகிமையானவர் குமாரன். கடவுளுடைய மாட்சிமையின்(மகிமையின்) சுடரொளி குமாரன்.
ஆனால்பிதா வேறு. குமரன் வேறு
பிதாவின் மகிமையாகக் குமாரன் வெளிப்பட்டார்
But" the Son is no whit inferior to the Fathe but every way His equal "
படிக்க யோவான் 1:1, 5:17 8:42 10;30:9 17:5.
சுருக்கமாகச் சொல்லப்போனால் பிதாவாகிய சூரியனிலிருந்து வெளிபட்ட சுடரொளி தான்(மகிமை) குமாரன்.
"Son was the brightness, brightness of His Father, yes also the brightness of His Father's glory '" ARHUR W. PINK
Ref 1 Exposition of the The Epistle to Hebrews by JOHN BROWN
2. The Daily Study Bible “The letter to Hebrews “By WILLIAM BARCLAY
3. An Exposition of Hebrews by ARTHUR W.PINK
4. The Bible Exposition commentary by WARREN W. WIERSBE