Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1,2 ன்விளக்கம்.1
உங்கள் சிந்தனைக்கு!

எபிரேயருக்கு எழுதப்பட்ட நிருபம் 1:1,2 ன்விளக்கம்.

"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,"
இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."
(எபிரெயர் 1:1,2)


யூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய வெளிச்சங்களும் (God’s revelation) கிறிஸ்தவர்களாகிய நமக்குக் கிடைத்த வெளிப்படுத்தல்களும் எல்லாமே பிதா மூலம் பெறப்பட்டவை.(Divine orgin).

ஆனால் சில வேறுபாடுகள்

1.யூதர்களுக்குத் தீர்க்கதரிசிகள் மூலமாய் கடவுள் சிறு சிறு அளவில்
வெவ்வேறான வழிகளில் பேசினார்.
அதாவது முழுமை பெறாத வெளிப்படுத்தல்‌
Fragmentated and incmplete revelation. But it continues

ஆனால் நாம் குமாரன் மூலமாகபெற்ற வெளிச்சம் முழுமையானது.

It is a complete revelation by the Father through his Son

அடுத்தது
'திருவுளம்பற்றின தேவன்" என்றால் என்ன என்பதை பற்றித் தியானிக்கலாம்.

நம்முடைய கடவுள் பேசுகின்ற தேவன்.
இந்த உலகை படைப்பதற்கு முன்பும் அவர் பேசினார் என்று பார்க்கிறோம்.
ஆங்கிலத்தில் “And God said, Let there be light: and there was light” என்று பார்க்கலாம்.ஆதி1:3

நம் தேவன் ஆதி முதல் பேசுகின்ற தேவன். பேசாத மரமோ கல்லோ அல்ல.

தேவன் உலகை படைத்த நாள் முதல் இந்த நாள்வரை பேசிக்கொண்டேஇருக்கிறார்.நாம் முழுமையாகக் கேட்பதற்கு ஆயத்தமாக இல்லை.

அடுத்தது "பங்குபங்காகவும் வகைவகையாகவும்," என்றால் என்ன ?
அதாவது தேவன் பலமுறைகளில், பலவகைகளில் இஸ்ரவேல் மக்களிடம் பேசினார் என்று பொருள்.
அடுத்து பங்குபங்காக அல்லது பலமுறைகளில் என்பது எதைக் குறிக்கும்?
ஆங்கிலத்தில் "at sundry times" அல்லது at many times என்று பொருள். அதாவது பல கால கட்டங்களில் கடவுள் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினார்.
அதாவது தேவன் 1500 ஆண்டு கால இடைவெளியில் படிப்படியாக Gradually இஸ்ரவேல் மக்களோடு பேசினார்.பழைய ஏற்பாடு ஒரே நாளில் உண்டானது அல்ல.

1500 ஆண்டு கால இடைவெளியில் எழுதப்பட்ட முற்று பெறாத புத்தகம். பழைய ஏற்பாடு.
கடவுளுடைய வெளிப்படுத்தல் குமாரனுடைய பிறப்பில் முற்றுப்பெறுகிறது(இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்).
அது மோசேயின் நூல்களாக, தாவீதின் சங்கீதங்களாக, வரலாற்று நூல்களாக, தீர்க்கதரிசன உரைகளாகக் கொடுக்கப்பட்டது.ஆபிரகாம் முதல் மல்கியா தீர்க்கதரிசி காலம்வரை வரை தேவன் இஸ்ரவேல் மக்களோடு பேசினார்

"வகைவகையாக" அல்லது பலவகைகளில் என்றால் என்ன ?
அதாவது தேவன் தரிசனங்களாகக் கனவுகள் மூலமாக(Visions and dreams) தேவனின் சத்தத்தின் மூலமாக, தூதர்கள் மூலமாக ஆவியானவரின் உந்துதல் மூலமாக என்று பல வகையில் பேசினார். அவைகள் உவமைகளாக, உருவகங்களாக, எச்சரிப்புகளாகவும் இருந்தது.

Ref 1 Exposition of The Epistle to Hebrews by JOHN BROWN
2. The Daily Study Bible “The letter to Hebrews “By WILLIAM BARCLAY
3. An Exposition of Hebrews by ARTHUR W.PINK
4. The Bible Exposition Commentary by WARREN W. WIERSBE