அரசர்கள் புத்தகம் வேத பாடம் 13
உங்கள் சிந்தனைக்கு:
அரசர்கள் புத்தகம்
வேத பாடம் 13
முதியவர்களை மதிக்காத ரெகொபெயாம்
இவனுடைய ஆட்சி காலத்தில் தான் ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிந்தது.
இவன் தெற்கு பகுதியில் யூத கோத்திரத்து மன்னனாக ஆண்டான். தன்னுடைய மதீயீனத்தால் மூத்தவர்களை அரவணைக்கத் தவறிய காரணத்தால்
தன் தகப்பன் சாலமனிடமிருந்து பெற்ற
ஒருமைப்பட்ட இஸ்ரேல் தேசத்தைக் கட்டி காக்க முடியாமல் இரண்டாகப் பிரிவதற்கு காரணமாகிவிட்டான்.
இவனுடைய தாய்
அம்மோனியப் பெண்ணாகிய நாமாள் என்பவள்.14:21.
இவனுடைய பின் மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.
தாவீதுக்கு விரோதமாகக் கலகம் பண்ணின அப்சலோமின் தாயார் ஒரு சீரியா தேசத்தில் உள்ள கேசூரின் அரசனின் குமாரத்தி.
சாலமோனின் தாயார் உரியாவின் மனைவியாகிய பத்சேபாள். இவள் யூத குல பெண்மணி.2 சாமு 3:3
சில நேரங்களில் தாய்மார்களின் கலாச்சார பின்னணி மற்றும் மத வழிபாடுகள் பிள்ளைகளின் ஆவிக்குரிய பழக்கவழக்கங்களைப் பாதிக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
இவனுடைய வீழ்ச்சிக்குச் சாலமோன் இஸ்ரவேல் ஜனங்களின் மீது விதித்த அதிகமான வரிச்சுமையும் ஒரு காரணம் என்றாலும், அதைச் சரிகட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தவில்லை.
ரெகொபெயாம் முதியோர் தனக்குக் கூறிய புத்திமதியை உதாசீனம் செய்துவிட்டு, தன்னுடன் வளர்ந்த வாலிபரின் ஆலோசனின் படி
ஜனங்களின் பாரத்தை அதிகமாக்க ஆணை பிறப்பித்தான்
1 இராஜாக்கள் 12:8-14
இதனால் இஸ்ரேல் ஜனங்கள் யெரொபெயாமை இஸ்ரயேலருக்கும் அவனை அரசனாக்கினார்கள். யூதா கோத்திரம் மட்டுமே தாவீதின் குடும்பத்துக்கு உண்மையாயிருந்தது.
1 இராஜாக்கள் 12:20
யெரொபெயாம் அரசனாக்கப்பட்ட நிகழ்வு சீலோவைச் சேர்ந்த அகியா என்ற இறைவாக்கினன் மூலம் கூறிய யெகோவாவின் வார்த்தையைஉறுதிப்படுத்தியது
1 இராஜாக்கள் 12:15
ரெகொபெயாமின் வாழ்க்கை இன்றய சபைத் தலைவர்களுக்கு இயக்கத் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.
புதிதாகப் பொறுப்பேற்கும் தலைவர்கள் மூத்த தலைவர்களின் ஆலோசனைகளையும் அறிவுறிகளையும் அவர்களின் அனுபவங்களையும் மதிக்க வேண்டும்.
அவர்களைக் காலத்துக்கு ஒவ்வாதவர்கள் என்று புறந்தள்ளி விடக் கூடாது.
இன்றைய தொழில்நுட்பம் அவர்களுக்குப் புரியாது. அவர்களது அறிவுரை ஏட்டுச் சுரக்காய் போல இருக்கிறது என்று புறம் தள்ளி விடக் கூடாது.
முதியவர்களின் ஆலோசனைகளைப் பயன்படுத்திக் கொள்கிற தலைவன் மிகப்பெரிய சாதனைகளைச் சாதிப்பான்.
அதே வேளையில் இளைஞர்களையும் அணைத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் தாலந்துகளை திறமைகளை அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வாலிபர்களையும் முதியவர்களையும் சமநிலையோடு பார்க்கிற தலைவர்கள் இன்றைக்கு தேவை.
இன்றய இளைஞர்களுக்கு அதிகாரத்தைத் துரிதமாக அடைய வேண்டுமென்ற ஆசை ஏராளம். அதைத் தலைவர்கள் உணர்த்தி புரிய வைக்க வேண்டும்.
ரெகொபெயாம் தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை முதியோர்கள் மூப்பர்கள் கொடுத்த அறிவுரைகளைப் பயன்படுத்தி இருந்தால் ஒரு வேளை அவனது ஆட்சி காலத்திலாவது ஒருமைப்பட்ட யூத தேசத்தைக் காப்பாற்றி இருக்கலாம்
We should honour age and maturity.
At the same time, we should not worship youth
"It’s a two-way street. I cultivate the friendship of young
people because I need them, and they need me. I help
them catch upon the past, and they help me catch up
on the present". W.wiersbe