Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை
உங்கள் சிந்தனைக்கு:
There is no success without sacrifice. If you succeed without sacrifice, it is because someone has suffered before you. If you sacrifice without success, it is because someone will succeed after. --Rick Joyner

தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை. தியாகம் செய்யாமல் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் உங்களுக்கு முன் யாரோ ஒருவர் கஷ்டப்பட்டிருப்பதால் தான். நீங்கள் வெற்றி பெறாமல் தியாகம் செய்தால் அதற்குப் பிறகு யாராவது வெற்றி பெறுவார்கள். --ரிக் ஜாய்னர்.


தாவீதைப் பொறுத்தளவில் அவன் வாழ்க்கையில் அவன் அடைந்த ஏமாற்றங்கள் சந்தித்த துரோகங்கள், வலிகள், வேதனைகள், ஏராளம்.
அவன் சவுலை மிகவும் அதிகமாக நேசித்தான் மதித்தான். ஆனால் சவுல் அவன்மீது பொறாமை கொண்டு வாழ்நாள் முழுவதும் அவனைக் கொல்வதற்காகத் துரத்திக் கொண்டே இருந்தான். தாவீது அவனிடமிருந்து தப்பித்து பிழைக்க இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தான்.

தான் மிகவும் நேசித்த தன் மகன் அப்சலோமால் அவமானப்பட்டு ஆட்சி இழந்து மிகுந்த மனவேதனை அடைந்தான். அவன் நம்பி இருந்த படைத்தளபதி யோவாப் அவனுக்கு நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கவில்லை. அவனுடைய பாடுகள், தியாகங்கள்,மூலமாக ஒரு மிகப்பெரிய ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கினான்
ஆனால் அவன் மகன் சாலமோன் எந்தப் பாடுகளையும், கஷ்டங்களையும் அனுபவிக்காமல் சுலபமாகத் தகப்பன் சம்பாதித்த ஒருமைப்பட்ட இஸ்ரவேல் தேசத்தைச் சொந்தமாக்கிக் கொண்டான். ‌
தகப்பன் சம்பாதித்த சேர்த்துவைத்த பணத்தில் தேவனுக்கென்று ஒரு ஆலயத்தைச் சாலமன் கட்டினான்.
தாவீது உருவாக்கிய நிர்வாக அமைப்பை அப்படியே தனதாக்கி கொண்டான்.
இந்த வெற்றிக்கு எல்லாம் காரணம் தாவீதினுடைய பாடுகளும் தியாகமுமே.

அதுபோல நம்முடைய வாழ்க்கையிலும் அநேக நேரங்களில் நம்முடைய வெற்றிகளுக்கு நம்முடைய பாடுகள் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்திருக்கலாம்.

ஆனால் நம்முடைய பிள்ளைகள் எந்தப் பாடுகளையும் அனுபவிக்காமல் நாம் பெற்ற வெற்றிகளைச் சுவைக்கலாம்.

சில நேரங்களில் நாம் மிகவும் கஷ்டப்பட்டு பாடுபட்டு எந்தப் பயனையும், வெற்றியையும் பெற முடியாமல் கடந்து போகலாம்.
ஆனால் அதன் பலனை நம்முடைய சந்ததி நிச்சயமாகப் பெறக்கூடும்.
இது முழுக்க முழுக்க தேவனுடைய இறையாண்மை சார்ந்த காரியம்‌
நம்முடைய உழைப்புக்கு தகுந்த உயர்வை நாம் ஏன் பெறவில்லை என்று தேவனை கேட்கவும் முடியாது.
நாம் அடைய முடியாத சிகரங்களை நம்முடைய பிள்ளைகள் அடையும்போது அதைக் குறித்து ஆச்சரியமடையவும் கூடாது.
தாங்கள் விதைத்த ஆன்மீக காரியங்களை அறுவடை செய்த வெற்றி வீரர்களும் உண்டு.
விதைத்ததின் பலனை அனுபவிக்காமல் கடந்து போனவர்களும் உண்டு.
மற்றவர்கள் விதைத்ததை அறுவடை செய்தவர்களும் உண்டு.
இவைகள் அனைத்தும் தேவனுடைய திட்டத்தில் உண்டு. நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருக்கிறோமோ அந்த நிலையிலேயே நம்முடைய பணிகளைச் செய்து பரலோகத்தில் நிறைவான பலனைப் பெற்றுக் கொள்வோமாக.