எல்லா நேரங்களிலும் தேவன் நம்மை உடனடியாகத் தண்டிப்பதில்லை
.
*உங்கள் சிந்தனைக்கு*
:
*Instant Punishment of God Is Not for All the Time*
எல்லா *நேரங்களிலும் தேவன் நம்மை உடனடியாகத் தண்டிப்பதில்லை*
தேவன் எல்லா நேரங்களிலும் நாம் செய்யும் பாவங்களுக்கும், குற்றங்களுக்கும், மீறுதல்களுக்கும் உடனடியாகத் தண்டனையையோ அல்லது சிட்சையையோ வழங்குவதில்லை.
அவருடைய அநாதி தீர்மானத்தின்படியும், அவருடைய நோக்கத்தின்படியும், நம்முடைய பக்தி விருத்திக்காக அவருடைய சிட்சைகள் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படுகின்றன.
ஆனால் சில நேரங்களில், அவருடைய தண்டனைகளும் சிட்சைகளும் உடனடியாக வெளிப்படும். வேதாகமத்தில் நிகழ்ந்த அப்படிப்பட்ட சில சம்பவங்களைப் பார்ப்போம்.
1. சோதோம், கொமோராவின் அழிவு
? ஆதியாகமம் 19:24
2. ஆரோனின் குமாரர்களான நாதாபும் அபியூவும்
தேவனால் அங்கீகரிக்கப்படாத நெருப்பை பலிபீடத்தில் செலுத்தியதால் உடனடியாக மரித்தார்கள்.
? லேவியராகமம் 10:1–2
3. மிரியாமுக்கு ஏற்பட்ட குஷ்டரோகம்
மோசேக்கு விரோதமாகப் பேசினதினால், அவள் பனிபோல் வெண்மையான குஷ்டரோகியாக மாறினாள்.
? எண்ணாகமம் 12:10
4. கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள்
தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகக் கிளர்ந்தெழுந்ததால், உடனடியாகத் தீர்ப்புக்குள்ளாகி மரித்தார்கள்.
? எண்ணாகமம் 16ஆம் அதிகாரம்
5. அனனியா மற்றும் சப்பிராள்
ஆதித் திருச்சபையின் ஆரம்ப நாட்களில், பரிசுத்த ஆவியாரிடம் பொய் கூறியதால் உடனடியாக மரித்தார்கள்.
? அப்போஸ்தலர் 5:1–11
இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
*சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகளுக்கான தேவனுடைய சிட்சைகள் காலம் தாழ்த்தி வெளிப்படலாம்.*
*சில நேரங்களில் அவை உடனடியாகவும் நிகழலாம்.*
*தண்டனை தாமதமாகிறது என்பதற்காக, "கர்த்தர் என்னைத்* *தண்டிக்கவில்லை" அல்லது "நான் செய்தது* *சரியானதே" என்று எண்ணிவிடக் கூடாது.*
*தேவன் தமது நேரத்தில், தமது வழியில், தமது திட்டத்தின்படி தமது சிட்சையை* *வெளிப்படுத்துகிறார்*
.
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு நித்தியத் தண்டனை கிடையாது;
ஆனால் பிதாவாகிய தேவனின் சிட்சை உண்டு.
*Punishment is different from Discipline (Chastening).*
"எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால், நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே."
? எபிரெயர் 12:8