Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 நாளாகமம் (அல்லது* *குறிப்பேடுகள்)* **புத்தகம்


*1 நாளாகமம் (அல்லது* *குறிப்பேடுகள்)* **புத்தகம் –*

*வேதப்பாடம் 21*

*தியானிக்க வேண்டிய அதிகாரம்

*அதிகாரம் 22*

இந்த அதிகாரத்தில் தாவீது கடவுளுடைய ஆலயத்தை ஏன் கட்டவில்லை என்பதற்கான காரணத்தையும், அந்தப் பணியை செய்து முடிக்கும் பொறுப்பை கடவுள் சாலொமோனிடம் ஒப்படைத்ததையும், அதற்கான தன்னுடைய ஆசீர்வாதங்களையும், சாலொமோன் செய்ய வேண்டிய காரியங்களையும் சொல்லிவிட்டு, இறுதியாக அந்த ஆலய கட்டுமானத்தில் அர்ப்பணித்திருந்த பிரபுக்களைப்பற்றி சொன்ன வார்த்தைகளை இப்போது கவனிக்கலாம்:

*“உங்கள்* *இறைவனாகிய* *யெகோவாவைத்* *தேடும்படி, உங்கள்* *இருதயத்தையும்* *ஆத்துமாவையும்* *இப்பொழுதே* *அர்ப்பணியுங்கள்.* *இறைவனாகிய* *யெகோவாவின்* *பரிசுத்த இடத்தைக் கட்டத்* *தொடங்குங்கள்.”*

இந்தக் கருத்தை புதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு பொருத்திப் பார்க்கும்போது, சாலொமோனை ஒரு தலைவனாகவும், தேவனுடைய தனிப்பட்ட அழைப்பைப் பெற்ற ஊழியக்காரனாகவும், அந்த ஆலயத்தை கட்ட உதவியாக இருந்தவர்களை இணை ஊழியக்காரர்களாகவும், விசுவாசிகளாகவும் கருதலாம்.

இது தேவனுடைய ராஜ்யத்தை நிறுவ உழைக்கும் விசுவாசிகள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான பாடமாகும்.

தாவீது இங்கு கூறிய காரியம் என்னவென்றால் —
ஆலயத்தை கட்ட உதவி செய்பவர்கள், அந்தப் பணியை சாலொமோனுக்காகச் செய்யக்கூடாது.

அவர்கள் முதலில் ஆண்டவரைத் தேட வேண்டும்; அவருக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் ஆலய கட்டுமானப் பணியில் ஈடுபட வேண்டும்.

அதுபோல, விசுவாசிகள் தலைவர்கள், போதகர்கள், மேய்ப்பர்கள் ஆகியோருடன் இணைந்து சபை அல்லது அமைப்புச் சம்பந்தமான ஊழியங்களில் ஈடுபட்டாலும், முதலில் அவர்கள் கடவுளைத் தேடவும், அவருக்கு தங்களை அர்ப்பணிக்கவும் வேண்டும்.

அதற்குப் பிறகுதான் விசுவாசிகள் சபை மற்றும் அமைப்புச் சம்பந்தமான பணிகளில் தலைவர்களோடு இணைந்து பயணிக்க வேண்டும்.

தலைவரை மட்டும் மையப்படுத்தி, விசுவாசிகள் தேவனுடைய ராஜ்யத்தை கட்ட முயற்சிக்கக் கூடாது.

முதலில் கடவுளைத் தேட வேண்டும்; அவருக்கே நம்மை அர்ப்பணிக்க வேண்டும்; அவருடைய வழியில் நடக்க வேண்டும்.
"God is first a matter of the heart ,then of the hands"

Set your heart and built the sanctuary .

இதுவே ஒரு விசுவாசியின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.

பிறகுதான் கடவுளுடைய ராஜ்யத்தை கட்டும் பணியில் ஒரு விசுவாசி ஈடுபட வேண்டும்.

முதலில் குறிப்பிட்ட காரியத்தை (அதாவது கடவுளைத் தேடல் மற்றும் அர்ப்பணிப்பு) புறக்கணித்து ஊழியத்தை முதன்மைப்படுத்துவது வேதத்தின் படி சரியல்ல.

அப்படிச் செய்யப்பட்ட ஊழியங்கள் ஆசீர்வாதமாக இருக்காது. அந்த ஊழியத்தில் சோதனைகள் வரும் போது, அவர்கள் கர்த்தரோடு நெருங்கிய உறவு இல்லாத காரணத்தால், அதை சமாளிக்க முடியாமல் பின் வாங்கி விடுவார்கள்.

அவ்வாறு அவர்கள் ஊழியத்தையும் இழந்து, கர்த்தருடனிருந்த இணைப்பையும் இழந்து விடுவார்கள்.

நம் வாழ்க்கையின் பிரதான நோக்கம் — கர்த்தரைத் தேடுவதும், அவருக்கே நம்மை அர்ப்பணிப்பதும் ஆகும்.

இதுவே வெற்றியுள்ள வாழ்க்கைக்கான ஆரம்பப் பாடமாகும்.

முதலில் தேவனோடு உள்ள உறவு,
பிறகு குடும்ப வாழ்க்கை,
அதற்குப் பிறகுதான் ஊழியம்.

இந்த வரிசையை நாம் ஒருபோதும் மாற்றக் கூடாது.
*God first .*
*Ministry next*.