Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

தாய் பால்
உங்கள் சிந்தனைக்கு !
போதகர்கள் தாயை போல் தேவனுடைய வார்த்தைகளை தேவனிடத்திலிருந்து பெற்று அதை விசுவாசிகளுக்கு போஷிக்கிறவனாகவும், அதே வேளையில் விசுவாசிகளை புத்திசொல்லி தேற்றி எச்சரிக்கை செய்யும் தகப்பனாகவும் இருக்க வேண்டும்.
பவுலடியார் தெசலோனிக்கேய சபைக்கு தாயாகவும் அதே வேளையில் தகப்பனாகவும் இருந்தார் என்பதை அவர் அந்த சபைக்கு எழுதிய நிருபத்தில் பார்க்கலாம்

"பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,------தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல்" வச 2:7,8
"தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்."2:12

இந்த ஊழியம் ஒரு சில சபைகளில் மட்டுமே நடைபெறுகிறது .
தாய் பாலை கொண்டு விசுவாசிகளை போஷிக்க வேண்டிய போதகர்கள் தேவனுடைய செய்திக்காக வலை தளத்தை தேடி புட்டி பாலை கொண்டு போஷிக்கிறார்கள்.
புத்தி சொல்லி எச்சரிப்பதற்ககு பதிலாக " உங்களுக்கு ஆசிர்வாதம்" "இம்மாத வாக்குத்தத்தம்" என்று சொல்லி தேவபக்தியை ஆதாயத்தொழிலாக மாற்றி விட்டார்கள் இது ஒருபுறம்.
மறுபுறத்தில், பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தம் செய்வதற்கு முக்கியத்துவம் தராமல் வெளி தோற்றதை மட்டுமே அதிகமாக போதிக்கும் சபைகள்.
இவை இரண்டுமே வேதத்திற்கு எதிரானவை.
இந்த நிலைக்கு காரணம் விசுவாசிகள் தான் காரணம்.
தனிப்பட்ட முறையில் வேதத்தை தியானிக்க மனதில்லாமல் தேவனோடு உறவாட விருப்பமில்லாமல் போதகர்களை தேவனிடத்திலிருந்து ஆசிர்வாதங்களை பெற்று தரும் "முகவர்"களாக(Agent) மாற்றியதுதான் .
புதிய ஏற்பாட்டின் அடிப்படை சத்தியத்தை விசுவாசிகள் சரியாக புரியாததின் விளைவுதான் இது.
எனவே ஊழியர்களை குறை சொல்லி குற்றம் இல்லை.
இதன் விளைவு இவர்கள் " ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு" விட்டார்கள்