Invisible War
உங்கள் சிந்தனைக்கு:
விசுவாசிகளுக்கு எதிரான கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்.
An invisible war against the children of God
மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசிக்கும் எதிராக பிசாசினுடைய கண்ணுக்குப் புலப்படாத ஒரு யுத்தம்(Invisible War ) ஒன்று இருக்கிறது. என்றைக்கு தேவன் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தை சபித்தாரோ அன்று முதல் இந்த யுத்தத்தை சாத்தான் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறான்.
இதை மனம் திரும்பிய ஒவ்வொரு விசுவாசியும் அடிப்படையாக புரிந்து கொள்ள வேண்டும் .
நமக்கு எதிராக ஒரு கண்ணுக்கு புலப்படாத யுத்தம் இருக்கிறது என்பதை புரியாமல் நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.
அவன் நேரங்களில் நேரடியாக மோத மாட்டான். சர்ப்பத்தை போல நாம் நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில், எதிர்பாராத முறைகளில், எதிர்பாராத நபர்கள் மூலமாக நமக்கு தாக்குதல் இருந்து கொண்டே இருப்பான். நம்முடைய புகழை சாட்சியை களங்கப்படுத்த முயற்சிப்பான்.
பொருளாதார இழப்புகளை நமக்கு ஏற்படுத்துவான். நமக்குள்ள நல்ல உறவுகளை பிரித்து விடுவான்.
சில நேரங்களில் கொடூரமான நோய்களை அனுப்புவான் .
குடும்பத்தில் தந்திரமான பிரிவினைகளை ஏற்படுத்துவான்.
கணவன் மனைவி உறவு பிள்ளைகளுடைய உறவு இவற்றில் ரகசியமாய் நுழைந்து சில நேரங்களில் அவற்றை சீர் செய்ய முடியாத அளவுக்கு நடத்தி விடுவான்.
சாத்தானை நாம் அலட்சியமாக கடந்து போக முடியாது .கிரமமான ஜெபமும் வேதவாசிப்பும் தேவப் பிள்ளைகளுடைய ஐக்கியமும் நமக்கு மிகவும் அவசியம்.
மறைமுக போராட்டம்
விசுவாசிகளுக்கும் முழு நேரப் பணியாளர்களைப் போலவே அதிகமாக இருக்கும்.
முழு நேர பணியாளர்களுக்குத்தான் இந்த சோதனை அதிகமாக இருக்கும் விசுவாசிகளுக்கு அந்த அளவு சோதனை இருக்காது என்கிற பிசாசின் தந்திரத்தை முதலில் விசுவாசிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த அளவுக்கு அவன் விசுவாசிகளை வீழ்த்துகிறானோ அந்த அளவுக்கு அவனுடைய ராஜ்ஜியம் இந்த உலகத்தில் வலிமை பெறும்.
Believers are the real ambassadors for Christ.
அனேக நேரங்களில், அநேக காரியங்களில் விசுவாசிகளைத்தான் கிறிஸ்துவின் உண்மையான பிரதிநிதிகளாக உலக மக்கள் பார்க்கிறார்கள். இந்த சத்தியம் மிக முக்கியமானது
ஊழியர்களின் சோதனைகளை தாங்கிக் கொள்ள அநேகம் பேர் முன் வருவார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு உதவி ஒரு உண்மையான விசுவாசிக்கு அனேக நேரங்களில் கிடைக்காமல் போய்விடும் .
அனேக நேரங்களில் விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய போராட்டத்தை தனித்து சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்றைக்கு விசுவாசிகளை பிசாசு வீழ்த்தி வெற்றி காண்கிறானோ அன்றைக்கு சபை வல்லமை இழந்து விடும்.
விசுவாசிகள் இந்த ஆவிக்குரிய வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாக கருத வேண்டும் விசுவாசிகளுடைய வாழ்க்கையில் பீலேயாம் வருவார்கள்.
தியோத்திரேப்பு போன்றவர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் நுழைவார்கள்.
தேமா,யூதாஸ், நன்மை நியாயம் எது என்று அறிந்தும் அதை செய்ய மறுத்த பிலாத்து, உயிரோடு இருக்கும் வரை நாம் பின்பற்றும் நல்ல உபதேசங்களை ஆதரிக்காத அதிகாரியான நிக்கொதேமு போன்ற பல மனிதர்களை விசுவாசிகளின் வாழ்க்கையில் அனுப்பி செய்து கொண்டே இருப்பான். இவைகளை மேற்கொள்ள விசுவாசிகளுக்கு தேவ கிருபையும் பட்டையமாகிய வேத வசனமும் ஜெப வாழ்க்கையும் மிக அவசியம்.. ஆவிக்குரிய தலைவர்கள் விசுவாசிகளை இந்த சத்தியத்துக்குள் வளர்க்க கடமைப்பட்டவர்கள்... இதைத் தவிர விட்டால் ஒரு வல்லமையுள்ள அடுத்த தலைமுறை விசுவாசிகளை நாம் கட்டி எழுப்ப முடியாது.
படிக்க.ஆதி3:13-15,எபே 6:12 மற்றும் 2கொரி11:3