Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

பாரம்பரியங்கள்
உங்கள் சிந்தனைக்கு.
“மனிதர்கள் உருவாக்கிய பாரம்பரியங்களை தேவனுடைய வார்த்தைக்குமேல் உயர்த்துகிறவர்கள், இறுதியில் தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தையும் வல்லமையையும் தங்கள் வாழ்க்கையில் இழந்து விடுகிறார்கள். அவர்கள் வெளிப்படையாக மிகுந்த பக்தியுடன் காணப்பட்டாலும், அவர்களின் இருதயம் தேவனிடமிருந்து தூரமாகவே இருக்கிறது.”
— Warren W. Wiersbe
வேத வசனத்திற்கு ஒத்துவராத சபை பாரம்பரியங்கள், நடைமுறைகள், பண்டிகைகள்; தேவனுடைய கிருபையை மையமாக்காத மனிதர்களின் போதனைகள்; அர்த்தமற்ற சடங்குகள்—இவைகள் சபைகளையும் விசுவாசிகளையும் ஆளுகை செய்து கொண்டிருக்கும் வரையில்,
சபைகள் பாரம்பரியங்களையும் சடங்குகளையும்,
எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்ட தேவனுடைய வார்த்தைக்கு இணையாகவோ அதற்குமேலாகவோ கருதும் வரையில்,
உண்மையான எழுப்புதல் என்பது எட்டாத கனியாகவே இருக்கும்.
பழைய ஏற்பாட்டில் எசேக்கியா ராஜா போல,
புதிய ஏற்பாட்டு சபை வரலாற்றில் மார்ட்டின் லூத்தர் போன்றவர்கள் மீண்டும் சபைகளில் எழும்ப வேண்டும்.
விளைவுகளைப் பற்றி அஞ்சாமல்,
இழப்புகளைப் பற்றி சோர்ந்து போகாமல்,
மனிதர்களின் பாராட்டை விட தேவனுடைய அங்கீகாரத்தை நாடி,
சத்தியத்திற்காக நின்று பேசவும் வாழவும் தயாராக இருக்கும்
வாலிபர்கள் இன்றைய காலத்திற்கு அவசியமாக தேவை.
தேவனுடைய வார்த்தைக்கு மீண்டும் மையத்தைக் கொடுக்காமல்,
கிருபையின் நற்செய்தியை உயர்த்தாமல்,
பாரம்பரியங்களின் சங்கிலிகளை உடைக்காமல்,
சபை உயிர்ப்பும் எழுப்புதலும் அனுபவிக்க முடியாது.
“கர்த்தருடைய வார்த்தையே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.”
(1 பேதுரு 1:25)
அந்த வார்த்தைக்கு நாம் மீண்டும் திரும்பினாலே,
சபையும் எழும்பும்,
சமுதாயமும் மாற்றம் பெறும்.

எசேக்கியேல் சண்முகவேல்