மன்னிப்பு
உங்கள் சிந்தனைக்கு:
மன்னிப்பு கேட்பதில் இரண்டு வகைகள்.
சில பேர் மற்றவர்கள் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
ஆனால் இவர்கள் தவறு செய்யும் போது ஒருபோதும் மற்றவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.
இது பெருமையின் உச்சகட்டம்
.
மற்றொரு வகை
சிலர் யாரிடம் தங்களுக்கு சலுகை கிடைக்குமோ, உதவிகள் கிடைக்குமோ, அவர்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.
சிலர் பெரிய மனிதர்களிடம் தங்களை ஒரு தாழ்மையுள்ள மனிதர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக அவர்களிடம் சென்று மன்னிப்பு எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பார்கள்.
அவர்களோடு ஒப்புரவு அவார்கள்.
இது மிக பெரிய போலித்தனமான தாழ்மை.
இவர்கள் காரியங்களை சாதிப்பதற்காக தாழ்மை என்ற முகமூடி அணிபவர்கள்.
ஆனால் இவர்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் தன்னைவிட, தன் நிலையை விட எளிய மக்களிடம் அல்லது தங்களுக்கு உபயோகமில்லாத மற்றவரிடம் ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள்.
மன்னிப்பு என்பது மனதளவில் உணர்ந்து யாராயிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் தவறு என்று உணர்ந்தால் மன்னிப்பு கேட்பதுதான் உண்மையான தேவனுடைய மனிதன்.
அவன்தான் உண்மையான தாழ்மையுள்ள மனிதன்.