2.தீமோ 1:12 மொழிபெயர்ப்பின் குழப்பங்கள்.
உங்கள் சிந்தனைக்கு!
2.தீமோ 1:12 மொழிபெயர்ப்பின் குழப்பங்கள்.
"நான் யாரிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அறிவேன். அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு"
.2 தீமோ 1:12 (புதிய அல்லது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)
which is why I suffer as I do. But I am not ashamed, for I know whom I have believed, and I am convinced that he is able to guard until that day what has been entrusted to me.ESV
"நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்."
2 தீமோ 1:12 .
இது நாம் பயன்படுத்தும் பவர் மொழிபெயர்ப்பு
2 தீமோ 1:12ஐ அவர்கள்
" நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
என்று மொழிபெயர்த்துள்ளார்.
பவுலடியார் எழுதிய சூழ் நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இது தவறான மொழிபெயர்ப்பு என அறிய முடிகிறது .
அதே வேளையில் புதிய அல்லது கத்தோலிக்க மொழிபெயர்ப்பில் இந்த வார்த்தை "அவர் என்னிடம் ஒப்படைத்ததை இறுதிநாள்வரை காத்திட வல்லவர் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு"என்று மொழிபெயராக்கப்பட்டுள்ளது.
.
இதுதான் சரியான மொழிபெயர்ப்பு.
தேவன் பவுலுக்கு சுவிசேஷத்தை வெளிப்படுத்தினார்.
அந்த ஊழியத்தை பவுலிடம் ஒப்புக்கொடுத்தார்.
அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். ''இதன் பொருட்டே நான் இவ்வாறு துன்புற்று வருகிறேன்; எனினும் வெட்கமுறுவதில்லை
என்னிடம் ஒப்படைத்ததை, அந்த அழைப்பை கடவுள் இறுதிநாள்வரை காத்திட . வல்லவர்"என்று கூறுகிறார்
பவுல் தேவனிடம் ஒப்புக்கொடுத்ததை அல்ல, தேவன் பவுலிடம் ஒப்புக்கொடுத்ததை அவர் காக்க வல்லவர் இது தான் அதன் உண்மையான அர்த்தம்.
அறிந்து கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால் எந்த ஊழியமும் நமக்கு தேவன் தருகிறார்.
அதை நிறைவேற்ற அவர் நமக்கு கிருபை தருகிறார்.
நாமாகவே எந்த ஊழியத்தையும் தேவனிடமிருந்து பெற முடியாது .
இதுதான் இந்தப் பகுதியின் மையக் கருத்து