Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

கடமை தவறிய ஈசாக்கும் ரெபேக்காளும்

கடமை தவறிய ஈசாக்கும் ரெபேக்காளும். யாக்கோபு எத்தனாக மாறுவதற்கும்,ஏசா பழிவாங்கும் சிந்தியுள்ளவனாக மாறுவதற்கும் காரணம் அவர்களுடைய பெற்றோர்களே. அவர்கள் இருவரும் தங்கள் குடும்பத்தில் தேவனின் சித்தத்தை முழுமையாக செயல்படுத்த தவறினார்கள். ஏசா மூத்த மகன். அவன் பிறப்புரிமையை அவமதித்ததையும் பொருட்படுத்தாமல், இளையவன்தான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவன் என்பதை தெரிந்தும் ஏசாவை அளவுக்கு மீறி ஆசீர்வதிக்க நினைத்தது ஈசாக்கின் பெரிய தவறு. ரெபேக்காளை பொருத்த அளவில் தேவனுடைய திட்டத்தை தனிப்பட்ட முறையில் அறிந்தும், இரண்டு பிள்ளைகளை சமமாக பாவிக்காமல் இருந்தது முதல் தவறு. அடுத்தது தேவனே யாக்கோபு ஏசாவைஆளுவான் என்று சொல்லி இருந்தும் அதை அவர் செய்வதற்கு முன்பாக ரெபேக்காள் திட்டம் தீட்டி அந்த நோக்கத்தை தன் கையில் எடுத்து தவறான வழி முறைகளை சொல்லி யாக்கோபை எத்தனாக்கியது ரெபேக்காளின் இரண்டாவது தவறு. பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தில் தேவனுடைய சித்தத்தை சரியாக புரிந்து இருந்தால் இந்த பிரச்சனைகளை சரி செய்து இருக்கலாம் .இருந்தாலும் தேவனுடைய இறையாண்மை மறந்துவிட முடியாது. மாற்றவும் முடியாது.