A faith that can’t be tested can’t be trusted.
உங்கள் சிந்தனைக்கு:
A faith that can’t be tested can’t be trusted.
எந்த ஒரு விசுவாசமும் சோதிக்கப்பட்டாலன்றி அந்த விசுவாசம்
உண்மையான விசுவாசம் என்று கருத முடியாது.
Faith that was not tested cannot be trusted.
காதேஸ்பர்னேயா என்கிற இடத்தில் நடந்த நிகழ்வுகளை நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தேவன் அனுமதிப்பார்.
அந்த நிகழ்வில் நாம் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்பதை தேவன் பார்க்கிறார்.
கர்த்தரை சார்ந்து இருக்கிறோமா அவருடைய வசனத்தை விசுவாசிக்கிறோமா?
அவருடைய வாக்குறுதிகளை நம்புகிறோமா? கர்த்தரின் கிருபைகளை சார்ந்து இருக்கிறோமா? இதுவரை நடந்த வழிகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் தேவனை நோக்கி செல்கிறோமா? அல்லது பிரச்சனைகளை உலகத்தின் கண்கள் கொண்டு பார்க்கிறோமா? உலக சித்தாந்தத்தின் அடிப்படையில் எதிர்நோக்குகிறோமா? யாரை சார்ந்து முடிவு எடுக்கிறோம்?
பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் வழிகளை நாம் பின்பற்றி விடுகிறோமா? நம்முடைய வழிகாட்டிகளை மறந்து விடுகிறோமா? தேவனுடைய சித்தத்தை செய்ய மறந்து விடுகிறோமா?
இந்த காதேஸ்பர்னேயா ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வித்தியாசமான முறையில் இருக்கும்.
சிலருக்கு திருமண காரியமாக இருக்கலாம், சிலருக்கு ஊழியத்தை தெரிந்து கொள்வதற்கான காரியமாக இருக்கலாம், சிலருக்கு தொழிலை தேர்ந்தெடுப்பதற்குரிய காரியமாக இருக்கலாம், சிலருக்கு ஒரு ஐக்கியத்தில் தொடர்வதா வேண்டாமா னனஎன்கிற காரியமாக இருக்கலாம், சிலருக்கு பழைய நட்புகளை தொடர்வது பற்றிய காரியமாக இருக்கலாம்,
எந்த நிகழ்வாக இருந்தாலும் நாம் எடுக்கிற முடிவு தேவ சித்தத்தின்படி அவருடைய ஆலோசனைப்படி அவருடைய வழிநடத்துதலின் படி, வேத வசனத்தின்படி இருக்க வேண்டும்.
அன்றைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் 38 ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைந்து தேவன் வாக்குறுதி கொடுத்த கானானை அடையாமல் போன மாதிரி நாம் பெரும்பான்மையன மக்கள் சொல்லுகின்ற கருத்தின் அடிப்படையில் மாமிச கண் கொண்டு தேவனின் சித்தத்தை
நிறைவேற்ற மறுத்த காரணத்தினால் வெறும் கையோடு பரலோகத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
நாம் தேவன் மீது கொண்டிருக்கும் விசுவாசம் உண்மையானதா போலியானதா என்பதை கடவுள் விசுவாசத்தின் மூலமாகத்தான் நம்மை சோதிக்க முடியும்.
இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு காதேஸ்பர்னேயா. அதுபோல் நமக்கும் ஒரு காதேஸ்பர்னேயா இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது