எது கோதுமை?எது பதர்?
உங்கள் சிந்தனைக்கு:
எது கோதுமை?எது பதர்?
"சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக, என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக, கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 23:28
ஊழியக்காரர்களுடைய பேச்சு தானியமாக இருக்கவேண்டும். வைக்கோலாக இருக்ககூடாது.
இந்த விருப்பமே ஒவ்வொரு பிரசங்கியாரின் உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.
கேட்கிற விசுவாசிகளும் கேட்கிற செய்தி தானியமா?அல்லது வைக்கோலா? என்று புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.
இன்று பல பிரசங்கிமார்களுக்கு கோதுமை எது?வைக்கோல் எது ?என்றே தெரியவில்லை.
கேட்கிற அநேக விசுவாசிகளுக்கும் எது வைக்கோல் ?எது தானியம்? என்றும் தெரியவில்லை.
இதுதான் இன்றைய பரிதாப நிலைமை.பவுல் சொல்வது போல்
தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசப்படும் செய்திகள்தான் தானியம்
2 கொரிந்தியர் 2:17
விசுவாசிகளை பிரியப்படுத்துகிற,உலக நன்மைகளை
முக்கியப்படுத்துகிற ஆரோக்கியம் இல்லாத உபதேசங்களை பேசுகிற செய்திகளே வைக்கோல்.
ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ள விசுவாசிகளின், சுய இச்சைகள பூர்த்தி செய்கிற செய்திகளே வைக்கோல்.
2 தீமோத்தேயு 4:2
"நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்"என்று தைரியமாக தங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஊழியர்களிடம்
இருந்துதான் தேவனுடைய வசனம் வெளிப்படும் அதுதான் தானியம் ,கோதுமை.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:4