சபை ஆண்டவருடைய வருகையை எதிர்பார்த்து இருக்க வேண்டும்
உங்கள் சிந்தனைக்கு:
சபை ஆண்டவருடைய வருகையை எதிர்பார்த்து இருக்க வேண்டும். விழிப்போடு காத்திருக்க வேண்டும். ஆனால் அவருடைய வருகையை யூகிக்க முடியாது. கணிக்க முடியாது. நம்முடைய மரணத்தை எப்படி யூகிக்க முடியாதோ கணிக்கக் முடியாதோ அது போல் இயேசுவின் வருகையை நாம் கணிக்க முடியாது. நாம் எப்பொழுதும் மரணத்தை சந்திக்க ஆயுத்தமாக இருப்பதே ஆண்டவருடைய வருகைக்கு ஆயத்தமாகுதலுக்கு சமம். நமது வாழ்நாளில் ஒன்று நிச்சயமாக நடக்கும் அது மரணம்தான். ஆனால் வருகை நம்முடைய காலத்தில் வரலாம். வராமலும் இருக்கலாம். வருகையை குறித்து வேத பண்டிதர்கள் மத்தியில் விதவிதமான கருத்துக்கள் இருக்கும்பொழுது அதில் ஏதோ ஒன்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி சொல்வது ஏற்புடையதல்ல. மரணத்தை எதிர்நோக்கி நிற்போம் அதில் ஆண்டவருடைய வருகையும் அடங்கும் .சபை வருகையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் .அவருடைய வருகையை யூகிக்க தூண்டக்கூடாது அது நம்முடைய வேலை அல்ல