Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

அழைப்பில் மேன்மை இல்லை; உண்மைத்தன்மையில்தான் மேன்மை
*உங்கள் சிந்தனைக்கு!*

*அழைப்பில் மேன்மை இல்லை; உண்மைத்தன்மையில்தான் மேன்மை*

*நாம் மறுபடியும் பிறக்கும்போது, தேவனுக்கு முன்பாக சமநிலையில் (with equal status) இருக்கிறோம்* . ஆனால், நாம் ஒவ்வொருவரும் *வெவ்வேறு அழைப்புகளின்படி (with different calling) அழைக்கப்பட்டிருக்கிறோம்* .
*அந்த அழைப்பில் முழுநேர ஊழியம், பகுதிநேர ஊழியம் என்று தேவனிடத்தில் எந்தவிதமான* *பாகுபாடும் இல்லை.* தேவனுக்கு முன்பாக நாம் அனைவரும் வெவ்வேறு நிலைகளில் ஊழியம் செய்யவும், கிறிஸ்துவுடன் வாழவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். அழைப்பில் மேன்மை இல்லை; அழைக்கப்பட்ட பணியை நாம் எவ்வாறு நிறைவேற்றுகிறோம் என்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது.
*நாம் பெற்றுள்ள அழைப்பில் எவ்வாறு செயல்படுகிறோம், எவ்வளவு உண்மையோடு இருக்கிறோம், எவ்வாறு கர்த்தருக்குப் பிரியமாக வாழ்கிறோம் என்பதையே தேவன் பார்க்கிறார். அதற்கேற்ப அவர் நமக்குரிய பலனையும் பரிசையும் அளிப்பார்.*
முழுநேர ஊழியர்களுக்கு ஒரு விதமான அளவீடும், மற்ற விசுவாசிகளுக்கு வேறொரு விதமான அளவீடும் தேவனிடத்தில் கிடையாது. தேவன் பட்சபாதம் உள்ளவர் அல்ல. ஒவ்வொருவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பை எவ்வாறு உண்மையோடு நிறைவேற்றுகிறார்கள் என்பதையே அவர் மதிப்பிடுகிறார்.
*எனவே, ஒரு விசுவாசி முழுநேர ஊழியத்திற்கு வரவில்லை என்பதற்காக மற்றவர்களைப் பார்த்து ஏங்க வேண்டியதில்லை* ; *தன்னைத் தாழ்வாகவும் எண்ண வேண்டியதில்லை. தேவன் நமக்குக்* *கொடுத்துள்ள அழைப்பை உண்மையுடன் நிறைவேற்றுவதே நமது பொறுப்பு.*
நாம் அழைக்கப்பட்ட அழைப்பில் உண்மையாக நிலைத்து, கர்த்தருக்குப் பிரியமாகச் செயல்படும்போது, நமக்குரிய பரிசை ஆண்டவர் நிச்சயமாக அளிப்பார்.
“ஒவ்வொருவனும் தன் கிரியைக்குத்தக்கதாய் தேவனிடத்திலிருந்து பலனைப் பெறுவான்.”
வேதப்பகுதி: 2 கொரிந்தியர் 5:10; 1 கொரிந்தியர் 3:5–23
கடவுளுடைய பணியில்,