வந்தேறிகள் ஒரு பார்வை.
வந்தேறிகள் ஒரு பார்வை.
இன்றைக்கு தமிழகத்தில் "வந்தேறிகள் " "புலம்பெயர் தொழிலாளர்கள்" போன்ற பெயர்களை நாம் கேள்விப்படுகிறோம். அவர்களை குறித்து நம்மில் பல கிறிஸ்தவ தலைவர்கள், விசுவாசிகள் பல்வேறு கருத்துக்களை உடையவர்களாக காணப்படுகிறார்கள்.
அப்படிப் பார்த்தால்வேதத்தில் நான் அறிந்த வகையில் யூதர்களும் வந்தேறிகளே.
அவர்கள் நடுவில்தான் உலகின்இரட்சகர் தோன்றினார். அந்த யூதர்கள் தான் கானான் தேசத்தை விட்டு பஞ்சத்திற்காக 70 பேர்களுடன் எகிப்து தேசத்தில் குடியேறினார்கள். கர்த்தர் அவர்களோடு இருந்ததால் அவர்களை ஆசிர்வதித்தார் .அவர்கள் பலுகிப் பெருகினார்கள்.
பஞ்சத்தில் இருந்து அவர்களை காப்பாற்றிய யோசேப்பு செய்த உதவியை மறந்த ஒரு புதிய அரசு வந்த போது அவர்களை கொடுமைப்படுத்தினார்கள். ஆனாலும் கர்த்தர் அவர்களை விடுதலையாக்கி மீட்டெடுத்தார்.
அது மாத்திரம் அல்ல கிபி 70-க்கு பின்பு மறுபடியும் யூதர்கள் பல நாடுகளில் பிழைப்புக்காக குடியேறினார்கள். பல நாடுகளில் சித்திரவதைபட்டார்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். இடம்பெயர் புலம்பெயர்ந்த யூதர்கள் ஜெர்மனி தேசத்தில் அடைந்த கொடுமைகளை வரலாறு மறக்க முடியாது.
தேவனால் முன்குறிக்கப்பட்ட ஆசிர்வதிக்கப்பட்ட உலகத்தின் இரட்சிப்பின் திட்டத்தில் மிகப்பெரிய பங்கடைந்த இந்த யூதர்களும் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகள் வந்தேரிகளாகத்தான் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு
இந்தக் கருத்தை உள்வாங்கிக் கொண்டு வேலை வாய்ப்புக்காக ,உடல் உழைப்பை முதலீடாக கொண்டு வறுமையின் நிமித்தம் வருகின்ற அந்த தொழிலாளர்கள் மீது நம்முடைய பார்வை இருக்க வேண்டுமே தவிர கிறிஸ்தவர்களாகியநமக்கு மொழி ,இனத்தின் அடிப்படையில் நாம் யாரையும் பாகுபடுத்தி பார்க்க கூடாது .இது என்னுடைய கருத்து.
கம்யூனிச சித்தாந்தத்தை பேசுகின்ற தோழர்கள் கூட உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்று அவர்களை அணைத்து கொண்டாடும் பொழுது உலகத்தின் இரட்சிப்புக்காக தன்னையே அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவை தெய்வமாக வழிபடுகின்ற நாம் அதைவிட பன்மடங்கு அவர்களை அணைக்கிற மக்களாக காணப்பட வேண்டும்
தியானிக்க .யாத்1:வது அதிகாரம்.
எசேக்கியல் சண்முகவேல்