கொஞ்ச கால பிரிவு
உங்கள் சிந்தனைக்கு:
கொஞ்ச கால பிரிவு என்று எண்ணிய ரெபேக்காளுக்கு நேர்ந்த நிரந்தர பிரிவு
ரெபேக்காள் தன் இளைய மகன் யாக்கோபை மிகவும் அதிகமாக நேசித்தாள் .கர்ப்பத்தில் இருக்கும் போது" இளையவன் மூத்தவனை ஆண்டு கொள்வான்" என்கிற தேவனுடைய வார்த்தைக்கு ஏற்ப அவனுடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் கண்னும் கருத்துமாக வளர்த்து தன் அருகிலேயே பார்த்துக் கொண்டவள். அவன் அண்ணன் மூத்தவனை போல் அல்லாமல் வீட்டு பிள்ளையாக இருந்தவன். அதனால் தான் என்னவோ ஈசாக்கு ஏசாவை ஆசீர்வதிப்பதை தடுப்பதற்காக கர்த்தருக்கு சித்தம் இல்லாத காரியத்தை செய்ய தன் நேசித்த யாக்கோபை நிர்பந்தம் பண்ணி அதன் விளைவாக ஏசாவின்கோபத்திற்கு பயந்து சில நாட்கள் தன் சகோதரன் லாபான் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். அவள் நினைத்த சில நாட்கள் வருடங்களாக மாறிவிட்டது.அது நிரந்தர பிரிவாக மாறிவிட்டது .அந்தப் பிரிவுக்குப் பிறகு தன் பிரிய மகன் யாக்கோபை தான்மரித்து மட்டும் பார்க்கவில்லை .சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் கூட நாம் நினைக்கும் தற்காலிக பிரிவுகள், நிரந்தர பிரிவுகளாக, இழப்புகளாக மாறிவிடும். பார்க்க முடியும் என்று எண்ணிய மனிதர்களை ஒருபோதும் பார்க்க முடியாத மனிதர்களாக சில நேரங்களில் மாறிவிடும். நிரந்தரமோ,தற்காலிகமோ எல்லாம் தேவனுடைய கரத்தில் இருக்கிறது.
शुक्री 26:27,28, 27:44
எசேக்கியேல் சண்முகவேல்