சீகேமின் படுகொலைகளுக்கு யார் காரணம்?
சீகேமின் படுகொலைகளுக்கு யார் காரணம்?
சாத்தனின் வஞ்சக திட்டம் தடுக்கப்பட்டது எப்படி?
லேவி,சிமியோன் செயல்பாடுகள் சரியானதா?
ஆபிரகாமை தெரிந்து கொண்டு அவன் மூலமாக ஈசாக்கு ,யாக்கோபு வழியாக ஒரு பக்தி உள்ள, உலகத்தால் கறை படாத சந்ததியை உருவாக்கி அதன் முடிவில் உலகத்தின் இரட்சகர், திரித்துவத்தின் இரண்டாவது நபர் இவ்வுலகத்தில் இயேசு என்கிற பெயரில் வருவதை தேவன் முன் குறித்து இருந்தார்.
அதற்கு முக்கியமாக அவர் யாக்கோபை தேர்ந்தெடுத்து அவன் சந்ததி மூலமாக உலகத்தில் தமக்கென்று ஒரு ஜனத்தை ஏற்படுத்தினார்.
இந்த ஜனத்தின் முக்கிய குறிக்கோள் உலகத்தால் கறை படாத படி, உலக மக்களோடு உறவுகள் கலவாதபடி தங்கள் பரிசுத்தத்தை காக்க வேண்டும் என்பதே.
இந்தத் திட்டத்தை அறிந்த சாத்தான் ஆதி முதலே இதை கெடுப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். அப்படி கையாண்ட முதல் முயற்சி தான்ஆதி34ம் அதிகாரத்தில் நடந்த படுகொலை.
இந்த 34-வது அதிகாரத்தை நாம் சாதாரணமாகக் கடந்து போக முடியாது .இது மிகப்பெரிய ஒரு சாத்தானின் சதித்திட்டம் . இதுஎவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
இதனுடைய பின்னணி என்னவென்றால் ஆண்டவர் யாக்கோபை நோக்கி பெத்தேலுக்கு புறப்படு என்று சொன்னபோது அவன் அதற்கு உடனடியாக கீழ்படியாமல் தன் சகோதரனான ஏசாவின் பகுதிக்கும் செல்லாமல் தனியாக சுக்கோத்துக்கும், பிறகு சீகேமுக்கும் சென்றான். சீகேம் என்பது ஒரு வளமான பிரதேசம் .அதிலே அவன் ஏழு ஆண்டுகள் தங்கி இருந்தான் .அப்படி அவன் காலம் தாழ்த்தி அங்கேயே தங்கின காரணத்தினால் தான் அதை சாத்தான் பயன்படுத்தி அவனுடைய குடும்பத்தில் மிகப்பெரிய ஒரு அவமானத்தை ஏற்படுத்தினான்.
யாக்கோபின் குடும்பத்தார் சீகேமில் தங்கியிருக்கும் பொழுது யாக்கோபின் ஒரே மகள் தீனாள் அங்குள்ள முக்கியமான பிரபுவின் மகனால் கற்பழிக்கப்பட்டு தீட்டு படுத்தப்பட்டாள்.
அவளை தங்கள்வீட்டிலே அடைத்து வைத்திருந்தார்கள். ஆனாலும் அந்தப் பிரபுவின் மகன் யாக்கோபோடு சம்பந்தம் கொள்ள விரும்பினான். யாக்கோபு அந்த காலத்தில் அங்குள்ள மக்களை பார்க்கிலும் செல்வந்தராக இருந்தபடியினால் அந்த சீகேம் இனத் தலைவன் யாக்கோபுடன் சம்பந்தம் கொள்ள முன்வந்தான் .அதற்கு எந்த விலை கொடுக்கவும் தயாராக இருந்தான் .ஏனென்றால் அதன் மூலமாக யாக்கோபின் செல்வத்தை பறித்துக் கொள்ளலாம் என்பது அவனுடைய திட்டம்.
ஆனால் அதற்குப் பின்னால் சாத்தானுடைய சதித்திட்டம் ஒன்று இருந்தது .அந்த உறவு மூலம் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் பரிசுத்த தொடர்வை துண்டிக்க அவன் முயற்சி செய்தான் (corrupt the Godly line)ஒருவேளை அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால் இஸ்ரவேல் மக்களுடைய பரிசுத்தம் கெடுக்கப்பட்டு தேவனுடைய பரந்த நோக்கம் நிறைவேறாமல் போயிருக்கும்.
ஆனால் தேவன் திட்டத்தை தவிடுபொடியாக்கி அவர்களை வஞ்சகத்தினால் விருத்தசேதனத்திற்கு சம்மதிக்க வைத்து அதன் பிறகு மூன்றாம் நாளில் அவர்களுக்கு ஏற்பட்ட வலியின் போது லேவியும்சிமியோனும் அந்த அந்தப் பட்டணத்தில் உள்ள அனைத்து ஆண்களையும் படுகொலை செய்து கொள்ளையடித்து அந்த இடத்தை விட்டு கடந்து போனார்கள். இது பார்ப்பதற்கு லேவியும் சிமியோனும் செய்த வஞ்சகம் என்று நினைக்கலாம்.
ஆனால் அப்படி அல்ல .அந்தத் திட்டத்தை தேவன் அனுமதித்து அதன் மூலமாக யாக்கோபின் கோத்திரம் கறைபடாமல் பாதுகாக்கப்பட்டது. இதற்குப் பிறகு அந்நாட்களில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு உலக மக்களோடு திருமண உறவு கொள்ளாமல் இருக்க பலவிதமான கட்டளைகளை விதித்தார். சாத்தானின் மிகப்பெரிய சதி தடுக்கப்பட்டது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் யாக்கோபின் உடனடி கீழ்படியாமையாகும்.
ஆனாலும் தேவன் அளுகை செய்கிறார் .தேவன் நினைத்த திட்டம் ஒருபோதும் தடை படாதபடியாக இருப்பதற்கு இது படுகொலையாக தோன்றினாலும் சீமியோன் லேவியின் செயல்கள் தவறுதலாக இருந்தாலும் தேவன் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றினார். பரிசுத்த சந்ததி பாதுகாக்கப்பட்டு அதன் மூலமாக உலகத்தின் இரட்சகர் வருவதை தடை செய்ய முடியாமல் போய்விட்டது .தேவன் ஆளுகை செய்கிறார்.
நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடம் என்னவென்றால் தேவன் ஒவ்வொரு குடும்பத்தை குறித்தும் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். அந்த நோக்கத்தை கெடுக்கக்கூடிய உலக உறவுகளை திருமண பந்தங்களை நாம் தவிர்த்தால் நம்முடைய குடும்பத்தில் பரிசுத்த ொடர்பு பாதுகாக்கப்பட்டு தேவனுடைய சித்தம் நிறைவேறும்.
தியானிக்க ஆதியாகமம் 34 வது அதிகாரம் மற்றும் யாத்34:12-16,எண்23:9,1கொரி 6.:14-17
சண்முகவேல் எசேக்கியல்