Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

ஆபிரகாம் தனிமையாக சந்தித்த மூன்று மிகப் பெரிய வேதனைகள்

தன் முதல் மகன் இஸ்மவேலை பிரிந்த வேதனை.
சாராளை இழந்த பிறகு வாழ்ந்த 38 ஆண்டுகள் தனிமை வாழ்க்கை.
தன் நேசகுமாரன் ஈசாக்கை பலியிட அழைத்து சென்ற அந்த மூன்று நாள் பயணத்தின் வேதனை.

இந்த மூன்று சோதனைகளையும் அவன் தனியாக சந்தித்தான்.
பிரிவின் வேதனை, இழப்பின் வேதனை, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாச பரீட்சையின் சோதனை இவைகள் எல்லாவற்றிலும் மாபெரும் வெற்றி கண்டான் ஆபிரகாம்.
எனவேதான் நம்முடைய ஆவிக்குரிய தகப்பன் என அழைக்கப்படுகிறான்.
தேவனுக்காக மாபெரும் காரியங்களை சாதித்தவர்கள் அநேக நேரங்களில் தங்கள் போராட்டங்களை தனிமையிலே சந்தித்தவர்கள் என்பது நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியம்.
தேவனால் அனுமதிக்கப்பட்ட தனிமை வாழ்க்கை நிச்சயம் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்

எசேக்கியேல் சன்முகவேல்.944444774-