அருள் நிறைந்த இறை அரியணை
“அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. (எபி.4:16) இது புது மொழி பெயர்ப்பு
“தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்”. . (எபி.4:16)
நாம் ஏன் கிருபாசனத்தண்டையை தைரியமாக நெருங்க முடியும் ?இதற்கு என்ன காரணம்?
இந்த கிருபாசனம் என்பது இங்கு சொல்லப்பட்ட வார்த்தை,
அனால்புதிய மொழிப்பெயர்ப்பில் “அருள் நிறைந்த இறை அரியணை “என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் தேவாலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தில் கிருபாசனத்தைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
வருடத்திற்கு ஒரு தடவை பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு சென்று (ஆரோன்) தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று, காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து கிருபாசனத்துக்கு முன்பாக, ஏழுதரம் தன் விரலினால் தெளிப்பான்.
பின்பு, ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும், தெளிப்பான்.
பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. லேவி 16:1-17
இப்படி பழைய ஏற்பாட்டில் ஆரோன் தனக்காகவும் தன் ஜனங்களுக்காகவும் பாவ நிவர்த்தி செய்வான். இங்கு சொல்லப்பட்டிருக்கும் கிருபாசனம் என்பது ஆங்கிலத்தில்" *MERCY SEAT" என்று* சொல்லப்பட்டிருக்கிறது.
இதே வார்த்தைதான் ( கிருபாசனம் )புதிய ஏற்பாட்டில் எபிரேயருக்கு எழுதின நிருபத்தில் பழைய மொழிபெயர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் சரியான மொழிபெயர்ப்பு ' *அருள் நிறைந்த இறை அரியணை' ( Throne of Grace) என்பது* புதுமொழி பெயர்ப்பு.
இஸ்ரவேல் மக்களை தேவன் ஆசரிப்புக் கூடாரத்தின் தேவாலயத்தில் சந்திக்கும் இடம் MERCY SEAT". யாத்தி25;22
ஆனால் புதிய ஏற்பாட்டில் மகா பிரதான ஆசாரியரான இயேசு கிறிஸ்து பாவநிவாரணபலியாக ஒரே ஒரு தரம் தன்னையே பலியாக செலுத்தி வானங்களின் வழியாக பிரவேசித்து இன்று தேவனுடைய சன்னிதானத்தில் அருள் நிறைந்த இறை ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
இதற்கு ஆங்கிலத்தில் " *Throne of grace" என்று* பொருள்
கிருபாசனம் என்பதைவிட அருள் நிறைந்த இறை ஆசனம் என்பது மிக சரியான மொழிபெயர்ப்பு.
அருள் நிறைந்த இறை ஆசனம், இரக்கமும் கிருபையும் நிறைந்த ஒரு ஆசனம். அதில் இயேசு கிறிஸ்து வீற்றிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களைப் போல நடுக்கத்தோடு ஆசரிப்புக் கூடாரத்தில் வெளியே நிற்பதுபோல நாம் இன்று தேவ சந்நிதானத்தில் நிற்க வேண்டாம்.
இந்த ஆசனம் கிருபை, இரக்கம் நிறைந்த ஆசனம். எனவே, இதற்குள் தைரியமாக நாம் செல்லலாம். வெறுமனே பிரதான ஆசாரியர் மட்டுமே செல்லும் இடம் இரக்கத்தின் இருக்கை "MERCY SEAT"
இங்கு இஸ்ரவேல் மக்களை தேவன் சந்திக்கும் இடம்.
ஆனால் புதிய ஏற்பாட்டில் நாம் சந்திக்கும் இடம் "அருள் நிறைந்த இறை ஆசனம் "
இங்கு எந்த கோழையும் செல்லலாம். எந்த பாவியும் செல்லலாம். எந்த பலவீனரும் செல்லலாம். நாம் காலேபைப் போல, யோசுவாவைப் போல வெற்றி வீரராக இல்லாமல் இருக்கலாம். பேதுருவைப் போல மறுதலித்து கூட இருக்கலாம். ஏழையாகக் கூட இருக்கலாம். நோயாளியாகக் கூட இருக்கலாம். படிப்பறிவு இல்லாத மக்களாகக் கூட இருக்கலாம்.
நம்மைப்போல எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டு எல்லா நிலைகளிலும் பாடுகள் அனுபவித்து, எல்லாராலும் கைவிடப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு ஆனாலும் பாவம் செய்யாத பிரதான ஆசாரியர் இயேசுக்கிறிஸ்து நமக்கு இருக்கிறபடியால் அவர் நம் உணர்வுகளை புரிந்து கொள்வார்.
நம்முடைய நிலைமைகளை அறிந்து கொள்வார். நம்முடைய பலவீனங்கள் தோல்விகள் எல்லாவற்றையும் அவர் அறிந்து கொள்ள வல்லவராயிருக்கிறார். எனவேதான் பழைய ஏற்பாட்டு யூதர்களைப்போல தேவாலயத்திற்கு வெளியே நிற்காமல் இந்த தைரியமாக நுழைய நமக்கு அனுக்கிரகம் கிடைத்திருக்கிறது.
எல்லோரும் இங்கு நேரடியாக (Direct) , சம அந்தஸ்துடன் (Equal status),எந்நேரமும்( All the time )இரக்கமும் கிருபையும் பெற தைரியமாக இங்கு செல்லலாம் . இது தான் புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவம்.
*We have equal, unlimited, and free access to the “Throne of Grace”*
சம அந்தஸ்து என்றால் இன்றைக்கு புதிதாக பிறந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவனாக இருந்தாலும் இருவருக்கும் ஒரே நிலை.(Equal Status)
நேரடியாக என்றால் எந்த மத்தியஸ்தம் இல்லாமல் தைரியமாக குமாரன் மூலம் பிதாவை நெருங்கலாம்.
எந்நேரமும் என்றால் பழைய ஏற்பாட்டு பிரதான ஆசாரியன் அடிக்கடி கிருபாசனத்தண்டை நெருங்க முடியாது .
நாமக்கு அப்படி அல்ல 24 மணி நேரமும் தேவனுடைய குமாரன் மூலம் தேவ சந்நிதியில் நுழையும் கிருபையை பெற்றிருக்கிறோம்.
இந்த நம்பிக்கையில்தான் நாம் முழு நிச்சயத் தோடும், தைரியமாக தேவ சந்நிதியில்பிரவேசிக்க நமக்கு கிருபை அருளப்பட்டிருக்கிறது.
இதைவிட ஒரு விசுவாசிக்கு வேறு என்ன ஆசீர்வாதம் தேவை? தேவனுடைய சமூகத்தில் எதையும் அவரது சித்தத்தின் அடிப்படையில் நாம் தேவனிடத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளமுடியும். இது தான் புதிய ஏற்பாட்டு ஆசாரியத்துவ மகிமை.
Ezekiel shanmugavel