Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

விசுவாசமும் திறமைகளும்

உங்கள் சிந்தனைக்கு:

விசுவாசம் என்கிற பெயரில் மனிதனின் திறமைகளை புறக்கணிப்பது சரியா?

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தைவிட்டு புறப்பட்டு முதலில் வந்த இடம் சீனாய் மலை .
இந்த இடத்தில் ஏறக்குறைய 11 மாதங்கள் தங்கி இருந்தார்கள்.
இந்த இடத்தில் தான் தேவன் அவர்களுக்கு கற்பனைகளையும் கட்டளைகளையும் கொடுத்தார் .
இங்குதான் ஆசரிப்பு கூடாரத்தை எப்படி உருவாக்குவது, ஆரோனை தெரிந்தெடுத்து  அந்த குடும்பத்தாரை இஸ்ரவேல் மக்களின் மதகுருக்களாக ஆக்கியது, லேவியரை அவர்களுக்கு உதவியாக மாற்றிய அனைத்து நிகழ்வுகளும் இந்த இடத்தில் தான் நடந்தது..
அடுத்தது அவர்கள் கானானை நோக்கி பயணம் செய்ய வேண்டியது. இது மிகவும் நீண்ட பயணம்.
38 ஆண்டுகள் கால நீட்டிப்பு செய்த பயணம்.
இந்தப் பயணத்தில் ஷெகினா என்று சொல்லப்படும் மேகம், அதாவது தேவ மகிமை அவர்களை வழிநடத்தியது..
மேகமானது இரண்டுநாளாவது, ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள், அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.
கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள், கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்,
எண்ணாகமம் 9:22,23.
காரியம் இப்படி இருக்க

அந்தப் பயணத்தில் மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனாகிய ஓபாவை நோக்கி "எங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம், நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்" என்று அழைத்தான்
எண்ணாகமம் 10:28,29
அவன் மறுத்தபோது
அவனை வலியுறுத்தி
"நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்,; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்." என சொல்லி அழைத்தான்
எண்ணாகமம் 10:31
இதற்கு அவன் சம்மதித்தானா, இல்லையா என்று தெரியவில்லை .. ஆனால் அவன் சம்மதித்ததாக அறிய முடிகிறது.காரணம்
பிற்காலத்தில் அவன் சந்ததி இஸ்ரவேலரோடு இருந்ததாக அறியக்கூடியதாக இருக்கிறது.நியாதி1:16, மற்றும் 4:11

இதில் இரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும்.
கர்த்தருடைய பிரசன்னமே இஸ்ரவேலரை வழிநடத்தின போது ஏன் மைத்துனரை உதவிக்காக அழைக்க வேண்டும்?
இதில் இரண்டு வகையான கருத்துக்கள் உண்டு.
முதலாவது மோசே அப்படி தன் மைத்துனரை உதவிக்கு வழிகாட்ட அழைத்தது கர்த்தரை சிறுமைப்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்கிற கருத்து உண்டு.
அதே வேளையில்
மனித ஞானத்தை, உதவிகளை, திறமைகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்கிற கருத்தும் உண்டு.
Divine providence does not minimize or destroy human ability or responsibility.W.W.Wiersbe
அந்த வனாந்திர பயணத்தில் வனாந்திரத்தை  அதன், பாதைகளை நன்கறிந்த மைத்துனரின் உதவியை நாடியதில் எந்த தவறும் இல்லை.

மோசே அப்படி அழைத்தது தவறு என்றால் ஆண்டவர் மோசேயுடன் பேசி கண்டித்திருப்பார்.
மோசேயும் கர்த்தருக்கு விரோதமாக அந்த காரியத்தை செய்திருக்க மாட்டான்
அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே இந்த காரியம் கடவுளின் சித்தத்தின்படி நடந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளக்கூடிய காரியங்கள்.
1.எந்த காரியத்திலும், ஊழியத்திலும்
தெய்வீக வழி நடத்துதல் இருந்தாலும் மனிதனுடைய ஞானத்தை பயன்படுத்துவது எந்த தவறும் இல்லை. 2.ஆன்மீகப் பார்வை உள்ளவன் எப்பொழுதும் ஞானமாக செயல்படுவான். மனித தயவையும் மற்றவர்களின் ஞானத்தையும் திறமைகளையும் கர்த்தரோடு இருக்கிற மனிதன் ஒருபோதும் பயன்படுத்த தவறுவதில்லை.

3.இதே போல் தான் தெயவீக சுகத்தைப் பற்றிய காரியமும். கர்த்தர் சுகம் தருவார் என்கிற விசுவாசம், நம்பிக்கை இருந்தாலும் மனிதனுக்கு ஞானத்தை கொடுத்து அவன் கண்டுபிடித்த மருந்துகளை எடுத்துக் கொள்வதிலும் எந்த தவறும் இல்லை. அதில் எந்த பாவமும் இல்லை..
அப்படி நாம் செய்வதால் விசுவாச குறைவுள்ள‌‌ விசுவாசிகளாக கருதவும் முடியாது.
நம்முடைய வாழ்க்கையிலே இதுபோன்ற தருணங்கள் வரும்போது மனிதனின் திறமைகளை பயன்படுத்த நமக்கு கடவுள் கிருபை தருவாராக.
கர்த்தர் மகிமைப்படுவாக.