Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

ஆவிக்குரிய வாழ்க்கையில் உதாசீனமும், அலட்சியமும் இருக்கக் கூடாது.
ஆவிக்குரிய வாழ்க்கையில் உதாசீனமும், அலட்சியமும் இருக்கக் கூடாது.
தேவன் நமக்கு கொடுத்த கிருபைகளையும், வரங்களையும் உதாசீனமோ அலட்சியமோ படுத்தக்கூடாது.
அப்படி நாம் அலட்சியப்படுத்தினால், உதாசீனப்படுத்தினால் பின்னால் அவற்றை நாம் விரும்பி கண்ணீரோடு தேடினாலும் அவைகளை பெற்றுக் கொள்ள முடியாது.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஏசா. அவன் பிறப்புரிமையை உதாசீனம் பண்ணி, அலட்சியம் பண்ணி அதை யாக்கோபுக்கு விற்று விட்டான் .
அதை குறித்து கண்ணீரோடு பின் நாட்களில்தேடியும் அதை அடைய முடியாமல் போனான்.
எபி12:17ன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் "இழந்த அந்த நிலையை மாற்ற இடமில்லை" என்பதுதான். அதனால் அவன் பிறப்புரிமையை திரும்பப் பெற முடியாமல் போய்விட்டது. ஒரு தடவை நாம் பெற்ற ஆவிக்குரிய கிருபைகளை, வரங்களை உதாசீனம் பண்ணி இழந்துவிட்ட பிறகு பின்னாட்களில் எவ்வளவு கண்ணீர் விட்டு தேடினாலும் அவைகள் ஒருபோதும் திரும்ப நமக்கு கிடைக்காது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நமக்கு தேவை spiritual diligence.(ஆவிக்குரிய அக்கறை)எபி12:16,17