Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

ஆவிக்குரிய பார்வைக் கோளாறு.
ஆவிக்குரிய பார்வைக் கோளாறு.
கானானை ‌ வேவு பார்க்க சென்ற 12 பேரில் 10 பேர் அந்த இடம் வருகிறவர்களை அழிக்கும் நாடாகப் பார்த்தார்கள்.

அந்த நாடு தங்களை அழித்துவிடும் என்று நம்பினார்கள்.

" it, is a land that eateth up the inhabitants thereof"

ஆனால் மற்ற இரண்டு பேர் கானான் நமக்கு வாழ்வளிக்கும் நாடாக பார்த்தார்கள்.
"அந்த நாட்டை நாம் எளிதாக வென்று விடலாம். அவர்கள் நமக்கு இறையவார்கள்'' என்று விசுவாசித்தார்கள்.

" for they are bread for us'
Num 14:9

இதுதான் நம்மில் பலருடைய ஆவிக்குரிய பார்வைக் கோளாறு.

தேவன் வைத்திருக்கிற பல ஆசீர்வாதங்களை தடுத்து, பார்த்ததையும், கேட்டதையும், நம்பி தேவன் சொல்கிறதையும், நமக்கு பேசினதையும், உணர்த்தினதையும் தீர்க்கதரிசனமாக நாம் அறிந்த காரியத்தையும் விசுவாசிக்க தவறிய காரணத்தால் தேவன் நமக்கு முன் குறித்து திட்டமிட்ட பல ஆசீர்வாதங்களை இழந்து விடுகிறோம்.

தேவனைப் பற்றிய பார்வை ஆபிரகாமை விசுவாசித்தின் தகப்பனாக மாற்றியது.

மோசேயின் தேவனைப் பற்றிய பார்வை அவனை எகிப்தின் பொக்கிஷங்களை வெறுத்து தேவனுடைய மக்களோடு அடையாளப்படுத்தியது.

தேவனைப் பற்றிய பார்வை யாக்கோபை மிகப்பெரிய ஜெப வீரனாக மாற்றி இஸ்ரவேல் என்ற பெயரை பெற வைத்தது.

கடவுளைப் பற்றிய தானியேலின்‌ பார்வை பாபிலோன் தேசத்தில் அவனை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் நம்முடைய வெற்றி வாழ்க்கைக்கு அடித்தளமாக இருப்பது நாம் தேவனை எவ்வாறு புரிந்து கொண்டோம், வசனத்தின் அடிப்படையில் எவ்வாறு விளங்கிக் கொண்டோம், என்பதில் தான் இருக்கிறது. அநேக நேரங்களில் பெரும்பான்மை மக்களோடு சமரசம் செய்து கொள்கிற காரியம் நம்மை தேவனைப் பற்றிய சரியான புரிதலில் இருந்து விலக்கிவிடும்.
பவுல் சொல்வது போல அநேகர் வழி விலகிப் போனாலும் விசுவாச உலகில்
சிறுபான்மையானவராக இருந்தாலும் நாம் நமது தேவனைப் பற்றிய புரிதலில் இருந்து மாறாமல் இருக்க கர்த்தர் கிருபை செய்வாராக கர்த்தர் மகிமைப்படுவராக