Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோபுவின் புத்தகம் – வேதப் பாடம் 23
உங்கள் சிந்தனைக்கு…
யோபுவின் புத்தகம் – வேதப் பாடம் 23

" *தலைமுறை சாபமா? அல்லது பாவத்தின் விளைவுகளா*
?"
"தந்தையின் அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்காகக் கடவுள் சேர்த்து வைக்கிறார்."

(யோபு 21:19)
யோபு 21-ஆம் அதிகாரத்தில், துன்மார்க்கர்களின் செழிப்பையும் அவர்களுடைய இறுதி அழிவையும் பற்றி யோபு பேசும்போது இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.
முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மை என்னவென்றால், *இது யோபுவின் விவாதத்தில் கூறப்பட்ட கருத்து;*

*தேவனுடைய நேரடி அறிவிப்பு அல்ல.*
*வேதாகமத்தில் தேவன் நேரடியாகப்* *பேசும் பகுதிகளும் உள்ளன; மனிதர்கள் தேவனைப்* *பற்றி பேசும் பகுதிகளும் உள்ளன* . *இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. எனவே* , ஒரு மனிதர் கூறிய ஒவ்வொரு கருத்தையும் தேவனுடைய இறுதியான போதனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் வேதாகமத்தின் முழு வெளிப்பாட்டின் வெளிச்சத்தில் ஆராய வேண்டும்.
*யோபுவின் கருத்து என்னவென்றால், ஒரு தகப்பனுடைய பாவத்தின் விளைவுகள் அவனுடைய பிள்ளைகளையும்* *பாதிக்கக்கூடும் என்பதாகும். இது* *யோபு வாழ்ந்த காலத்தில் பரவலாக இருந்த ஒரு பொதுவான புரிதலாகவும்* *இருந்திருக்கலாம்* . அந்நாளில் மோசேயின் நியாயப்பிரமாணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. யோபுவுக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே மோசேயின் மூலம் தேவனுடைய கட்டளைகள் கொடுக்கப்பட்டன.
அப்படிப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணத்தில்,
"பிதாக்களின் அக்கிரமத்தைப் பிள்ளைகள்மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைவரைக்கும் விசாரிக்கிறேன்."

(யாத்திராகமம் 20:5)
என்ற வசனம் காணப்படுகிறது. இதே கருத்து யாத்திராகமம் 34:7, எண்ணாகமம் 14:18, உபாகமம் 5:9 ஆகிய பகுதிகளிலும் வருகிறது.
ஆனால் இந்த வசனங்கள், குற்றமற்ற பிள்ளைகளை அவர்களுடைய பெற்றோரின் பாவத்திற்காக தேவன் தண்டிக்கிறார் என்று அர்த்தப்படுத்தக் கூடாது.
வேதாகமம் இரண்டு உண்மைகளை இணையாகக்ஞ கற்பிக்கிறது.
1. *பாவத்தின் விளைவுகள் தலைமுறைகளைப் பாதிக்கலாம்*
ஒரு பெற்றோரின் விக்கிரகாராதனை, அநீதி, ஒழுக்கக்கேடு அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியாத வாழ்க்கை, குடும்பத்திலும் சமுதாயத்திலும் தீய விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்த விளைவுகள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும்.
இது பாவத்தின் விளைவு (Consequences).
2. *பாவத்தின் குற்றமும் நியாயத்தீர்ப்பும் தனிப்பட்டவை*
3.
வேதாகமம் மிகவும் தெளிவாகக் கூறுகிறது:
"பிதாக்கள் பிள்ளைகளுக்காகவும், பிள்ளைகள் பிதாக்களுக்காகவும் கொல்லப்படக்கூடாது; ஒவ்வொருவனும் தன் பாவத்தினிமித்தம் கொல்லப்பட வேண்டும்."

(உபாகமம் 24:16)
மேலும்,
" *பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான்* ."

(எசேக்கியேல் 18:20)
எரேமியா 31 மற்றும் எசேக்கியேல் 18 ஆகிய அதிகாரங்களில், "தந்தையர் புளிப்பான திராட்சைக் காய்களைத் தின்றார்கள்; பிள்ளைகளின் பற்கள் கூசின" என்ற பழமொழியை தேவன் நிராகரிக்கிறார்.
அதாவது, ஒருவர் தன்னுடைய தற்போதைய ஆவிக்குரிய நிலைக்கு முழுமையாக முன்னோர்களையே குற்றம் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த மனந்திரும்புதலுக்கும், பாவத்திற்கும் தேவனுக்கு முன்பாகப் பொறுப்பாளிகள்.

" **Generational Curse" (தலைமுறை சாபம்) இருக்கிறதா*

*இன்றய கிறிஸ்தவ உலகில் பரவலாகக் கூறப்படும் "* *Generational Curse" (தலைமுறை சாபம்) என்ற கோட்பாடும் வேதாகமத்தின்* *முழு போதனையுடன் ஒத்துப்போவதில்லை.*

வேதாகமம் கூறுவது:
பாவத்தின் விளைவுகள் தலைமுறைகளைப் பாதிக்கலாம்.
ஆனால் பாவத்தின் குற்றம் தலைமுறைகளுக்கு மாற்றப்படாது.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பாவத்திற்கே தேவனுக்கு முன்பாகப் பொறுப்பாளிகள்.
நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று வேதாகமம் தெளிவாகச் சொல்லுகிறது. ஆனால், " *தலைமுறை சாபங்கள் நீக்கப்படுகின்றன" என்ற தனிப்பட்ட போதனை வேதாகமத்தில்* *எங்கும் தெளிவாகக் கற்பிக்கப்படவில்லை.*
எனவே, *தகப்பனுடைய பாவத்தின் குற்றத்தை தேவன் குற்றமற்ற பிள்ளைகள்மேல்* *சுமத்துகிறார் என்ற கருத்தையும், தலைமுறை சாபம் தானாகவே பிள்ளைகளுக்குக்* *கடத்தப்படுகிறது என்ற கருத்தையும் வேதாகமத்தின்* *அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாது.*

கருத்துப் புள்ளிகள்

ஒரு வசனத்தை மட்டும் வைத்து கோட்பாட்டை உருவாக்கக் கூடாது.
யோபு 21:19 என்பது யோபுவின் விவாதத்தில் கூறப்பட்ட கருத்து; தேவனுடைய நேரடி அறிவிப்பு அல்ல.
பாவத்தின் விளைவுகள் தலைமுறைகளைப் பாதிக்கலாம்.
பாவத்தின் குற்றம் தலைமுறைகளுக்குக் கடத்தப்படாது.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பாவத்திற்கே தேவனுக்கு முன்பாகப் பொறுப்பாளிகள்.
உபாகமம் 24:16 மற்றும் எசேக்கியேல் 18:20 தனிப்பட்ட பொறுப்பைத் தெளிவாக வலியுறுத்துகின்றன.
" *Generational Curse" என்ற கோட்பாட்டிற்கு வேதாகமத்தில் தெளிவான ஆதாரம்* *இல்லை* .
*எந்த மனிதரின் போதனையாக இருந்தாலும், அது வேதாகமத்தின் முழு வெளிப்பாட்டின்* *அடிப்படையில் ஆராயப்பட வேண்டும்;* *அவருடைய புகழின் அடிப்படையில் அல்ல.*

கடவுளுடைய பணியில்