இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ?
உங்கள் சிந்தனைக்கு:
இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயனை யாரெல்லாம் பெறுவார்கள் ?
“ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” எபி 9:15
இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்
முதலாம் உடன்படிக்கையின் கீழ் பாவம் செய்தவர்களை மன்னிக்கும்படியாக இயேசு கிறிஸ்து இப்பொழுது மரித்தார் என்பதுதான்.
WILLIAM BARCLAY என்கிற மிகப்பெரிய வேத பண்டிதர் இதைப் பற்றி எழுதும் பொழுது "இந்த வார்த்தை எபிரேய நிருபத்தில் உள்ள மிக முக்கியமான பகுதி,
அதுவும் மிகவும் கடினமான விளங்கிக் கொள்ள முடியாத பகுதி" என்று எழுதி இருக்கிறார்.
உண்மையிலேயே இதனுடைய அர்த்தம் என்ன?
நாம் அனைவரும் எண்ணுகிறமாதிரி இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரண பாடுகள் அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு (புதிய உடன்படிக்கையின் கீழ்) மட்டும் நித்திய சுதந்தரத்தை வழங்கும் என்று எண்ணுகிறோம்.
இந்த உலகில் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடைப்பெற்ற பிறகு அவருடைய பாடுகள், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைக்கிற எல்லோரும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்கிறோம் என்பது நாம் சாதாரணமாக நம்புகிற ஒரு காரியம்.
ஆனால் இது முழு உண்மை அல்ல.
இதை பற்றி WARREN WIERSBE என்கிற மிகப்பெரிய Bible commentator இவ்வாறு எழுதுகிறார்.
“There was no final and complete redemption under OT Covenant. Their transgression were covered by the blood of animals , but not cleansed until the sacrifice of Christ on the cross.”.( பழைய உடன்படிக்கையின் கீழ் முழுமையான மீட்பு இல்லை.
அவர்களின் மீறுதல்கள் விலங்குகளின் இரத்தத்தால் மூடப்பட்டிருந்ததேயொழிய , அவைகள் சிலுவையில் கிறிஸ்து பலியிடப்படும்வரை கழுவப்படவில்லை.)
“The efficacy of Christ ‘s atonement was retrospective as well as prospective “R .W . PINK
இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பயன் முன்தேதியிட்டு யூதர்களுக்கும் குறிப்பாக தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது இந்த வாக்கியத்தின் உண்மையான அர்த்தம்.
கீழ்க்காணும் வேத வாக்கியங்கள் மூலம் இதை புரிந்து கொள்ள முடியும்.
அவர் (ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்து) உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.
கீழ்க்காணும் வேத வாக்கியங்கள் மூலம் இதை புரிந்து கொள்ள முடியும்.
1 பேது 1:19,20, 1கொரி 10:3-4, ரோம 3:25.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டார்கள் என்பதே ஏற்றுக்கொள்ளக்கூடிய சத்தியம்“.
It was just as efficacious in taking away the transgressions of the believers before it was actually shed, as it is of cleansing believers today, nineteen centuries after it was shed. R.W .PINK
அவர்கள் (யூதர்கள் ) நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.எபி 11:40
The efficacy of Christ‘s atonement was retrospective as well as prospective.. R .W . PINK –Heb 9:15