தலைமை பதவியும் வெற்றிடமும்
தலைமை பதவியும் வெற்றிடமும்
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுபுறப்பட்ட நாற்பதாவது வருடத்தில் மிகப்பெரியதான மாற்றங்கள் நிகழ்ந்தது.
இஸ்ரவேலரின் கலகத்தின் நிமித்தமாக 38 வருட வனாந்திர வாழ்க்கையின முடிவில் மறுபடியுமாக காதேஷ்பர்னேயாவுக்கு திரும்பி வந்தார்கள்.(எண்ணாகம புத்தகம் இருபதாவது அதிகாரம்.)
இந்த நாற்பதாவது வருடத்தில் முதல் மாதத்தில் மிரியாம் இறந்து போனாள்.
ஆரோன் ஐந்தாவது மாதத்தில் இறந்து போனான். எண்ணா33:38.
அந்த வருடத்தின் இறுதி நாட்களில் மோசேயும் மரித்துப் போனான். உபா1:3
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தின அந்த முப்பெரும் தலைவர்கள் ஒரே வருடத்தில் மரித்துப் போனார்கள்.
மிகப்பெரிய வெற்றிடம் தலைமை தாங்குவதில் காணப்பட்டது.
ஆனால் மோசே தேவனுடைய சித்தத்தின்படி தனக்கு பின்னால் யோசுவாவை தலைமை பொறுப்புக்கு ஆய்த்தப்படுத்தி வைத்திருந்தான்.
எனவே இஸ்ரவேல் ஜனங்களை தலைமை தாங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
மோசேயும் தனக்குப் பின்னால் பொறுப்பேற்க ஒரு நல்ல இளைஞனை ஆயத்தப்படுத்தி தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார்.
புதிய ஏற்பாட்டில் பவுலும் கூட தனக்கு பின்னால் இளைஞர்களான தீமோத்தேயுவையும் தீத்துவையும் உருவாக்கி வைத்திருந்தார்.
அவர்கள் பவுலிடம்
பெற்ற சத்தியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தினார்கள்.
எபேசு சபையை தனக்குப் பிறகு வழிநடத்த தீமோத்தேயுவையை ஆயத்தப்படுத்தி இருந்தார்.
ஆனால் இன்றைக்கு சபைகளிலும், அமைப்புகளிலும், இயக்கங்களிலும் தேவனுடைய சித்தத்தின் படி அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு பதிலாக குடும்ப உறவுகளின் அடிப்படையிலும் ஜாதி, வட்டார, மொழி கணக்குகளின் அடிப்படையிலும் தலைமைப் பொறுப்புக்கு நபர்களை நியமனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பான்மையானவருக்கு முன்னோர்களிடம் காணப்பட்ட தரிசனமோ, பாரமோ அக்கறையோ, வைராக்கியமோ கிடையாது.
பவுலை உலகுக்கு அடையாளம் காட்டின பர்னபாக்களை பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளது.
அதுவும் கடைசி இந்த கடைசி 30 ஆண்டுகளில் தலைமைத்துவ பதவி நியமனம் என்பது நியமனம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஒரு உண்மையான தலைவனின் வெற்றி எதிலே இருக்கிறது என்றால் தான் பெற்ற தரிசனத்தை மற்றவர்களிடம் சரியான முறையில் கடத்தி அந்தப் பணியை நிறைவேற்றுகிறவரை அடையாளம் கண்டு ஒப்படைப்பதில் இருக்கிறது.
இன்றைய தேவை பவுலை அடையாளம் காட்டின பர்னபாக்களும் தீத்து தீமோத்தேயுவை வழிநடத்தின பவுல்களுமே.